தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

சமையல்

அவல் உப்புமா தேவையானவை: அவல்- 2 கப் வெங்காயம்- 3 பச்சை மிளகாய்- 4 எண்ணெய்- 4 தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்துமல்லி- சிறிதளவு மஞ்சள்தூள், கடுகு, உப்பு- சிறிதளவு எலுமிச்சம்பழம்- 1/2 செய்முறை: அவலை கழுவி த

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 11:49 am IST

அவல் உப்புமா

தேவையானவை:

அவல்- 2 கப்

வெங்காயம்- 3

பச்சை மிளகாய்- 4

எண்ணெய்- 4 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்துமல்லி- சிறிதளவு

மஞ்சள்தூள், கடுகு, உப்பு- சிறிதளவு

எலுமிச்சம்பழம்- 1/2

செய்முறை:

அவலை கழுவி தண்ணீரை வடித்துவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதில் ஊறிய அவலை உதிர்த்துச் சேர்க்கவும். உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். பரிமாறும்போது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

அவல் மிக்சர்

தேவையானவை:

அவல்- 3 கப்

வேர்க்கடலை, பொட்டுக்கடலை- 1/2 கப்

முந்திரி, திராட்சை- 1 கப்

மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள்- 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை- சிறிதளவு

உப்பு, நெய்- தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு அவலை பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும். மீண்டும் நெய்விட்டு பொட்டுக்கடலை, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலையை வறுக்கவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கவும். வறுத்த பொருள்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். அவல் மிக்சர் தயார்.

அவல் பாயாசம்

தேவையானவை:

அவல்- 1 கப்

தேங்காய்- 1

வெல்லம்- 3/4 கப்

முந்திரி, ஏலக்காய்தூள்- 1 தேக்கரண்டி

நெய்- சிறிதளவு

செய்முறை:

அவல், முந்திரியை நெய்விட்டு பொன்னிறமாக வறுக்கவும். தேங்காயைத் துருவி இரண்டு முறை பால் எடுக்கவும். வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.அவலை இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பாலில் வேக வைக்கவும்.  அவல் வெந்ததும் முதல் தேங்காய்ப் பால், காய்ச்சி வடிகட்டிய வெல்லத்தையும் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். கடைசியாக ஏலக்காய், வறுத்த முந்திரியைச்

சேர்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.