தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

ஓலா கேப்ஸ் இழப்பு ரூ. 662.4 கோடியாக அதிகரிப்பு!

2025 நிதியாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இழப்பு ரூ. 662.4 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

News image
Updated On :44 நிமிடங்கள் முன்பு

புதுதில்லி: போக்குவரத்துச் சந்தையில், ஓலா கேப்ஸ் எனப் பிரபலமாக அறியப்படும், சவாரி முன்பதிவுச் சேவை நிறுவனமான அனி டெக்னாலஜிஸ், 2025 நிதியாண்டில் தனது ஒருங்கிணைந்த இழப்பு ரூ. 662.4 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

அதே வேளையில் 2023-24 நிதியாண்டில் நிறுவனம் ரூ. 328.7 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது.

ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய், 2024 நிதியாண்டில் ரூ. 2,011.9 கோடியாக இருந்த நிலையில், 2025 நிதியாண்டில் சுமார் 42 சதவீதம் சரிந்து ரூ. 1,170.9 கோடியாகக் குறைந்துள்ளது.

சேவை விற்பனை மூலம் நிறுவனத்திற்கு வந்த வருவாய், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சுமார் 38 சதவீதம் குறைந்து, ரூ. 1,854.4 கோடியிலிருந்து ரூ. 1,147.9 கோடியாகச் சரிந்துள்ளது.

சேவை விற்பனை மூலம் கிடைத்த வருவாய், 2024 நிதியாண்டில் ரூ. 2.8 கோடியாக இருந்த நிலையில், 2025 நிதியாண்டில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு சரிந்து ரூ. 90 லட்சமாகச் சுருங்கியது.

தனி நிறுவனமாகப் பார்க்கையில், ஓலா கேப்ஸ் இழப்பு 2024 நிதியாண்டில் ரூ. 504.8 கோடியாக இருந்த நிலையில், 2025 நிதியாண்டில் இது அதிகரித்து ரூ. 697.6 கோடியாக உயர்ந்துள்ளது.

அனி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (ஓலா கேப்ஸ்) எனும் இணையவழிப் போக்குவரத்துச் சேவை நிறுவனம், 2024-25 நிதியாண்டிற்கான தனது வருவாயை ரூ. 1,060 கோடி என அறிவித்தது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இது 44 சதவீதம் குறைவாகும். அதே வேளையில், நிறுவனம் ரூ. 698 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Ola Cabs, has reported a widening of consolidated loss to Rs 662.4 crore in FY25.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.