நடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஹூண்டாய் மோட்டார்ஸ் 4வது காலாண்டு லாபம் 22% சரிவு!

நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 22.22 சதவீதம் சரிந்து ரூ. 1,255.63 கோடியாகப் இருப்பதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தெரிவித்தது.

கோப்புப் படம்.

Published On :

புதுதில்லி: தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், அதன் அதிகரித்த செலவினங்களின் உள்ளிட்டவையால், மார்ச் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 22.22 சதவீதம் சரிந்து ரூ. 1,255.63 கோடியாகப் இருப்பதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் இன்று தெரிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனம் ரூ. 1,614.35 கோடி அளவிற்கு, ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ஈட்டியிருப்பதாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தெரிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 17,940.28 கோடியாக இருந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்தச் செயல்பாட்டு வருவாய், தற்போது ரூ. 18,916.15 கோடியாக இருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டது. மேலும், இதே காலகட்டத்தில் ரூ. 15,974.46 கோடியாக இருந்த மொத்தச் செலவினங்கள், தற்போது ரூ. 17,571.66 கோடியாக உயர்ந்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்தது.

2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 5,431.52 கோடியாக இருந்தது. இதுவே, 2024-25 நிதியாண்டில் பதிவான ரூ. 5,640.21 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும்.

2025-26 நிதியாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்தச் செயல்பாட்டு வருவாய் ரூ. 70,763.33 கோடியாக இருந்தது. இதுவே, 2024-25 நிதியாண்டில் பதிவான ரூ. 69,192.89 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.

2025-26 நிதியாண்டிற்காக, தலா ரூ. 10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 21 ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

Summary

Hyundai Motor India Ltd reported a 22.22 per cent decline in consolidated profit after tax at Rs 1,255.63 crore in the March quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.