மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மஹிந்திரா ஹாலிடேஸ்: 4வது காலாண்டு லாபம் 43% சரிவு!

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 4வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம், 43 சதவீதம் சரிந்து ரூ. 41.49 கோடியாக உள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 2:14 pm

புதுதில்லி: மஹிந்திரா ஹாலிடேஸ் & ரிசார்ட்ஸ் இந்தியா லிமிடெட், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 4வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம், 43 சதவீதம் சரிந்து ரூ. 41.49 கோடியாக இருப்பாதாக நிறுவனம் அறிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலாண்டில், நிறுவனம் ரூ. 72.94 கோடி ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ஈட்டியிருந்தது.

4வது காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 820.29 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 778.83 கோடியாக இருந்ததது. இதற்கிடையில், நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் ரூ. 778.65 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 704.7 கோடியாக இருந்தது.

மார்ச் 31 உடன் முடிவடைந்த முழு நிதியாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 67 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு ரூ. 125.95 கோடியாக இருந்தததாக மஹிந்திரா ஹாலிடேஸ் தெரிவித்தது.

2026 நிதியாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 2,991.74 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு ரூ. 2,780.85 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Mahindra Holidays & Resorts India Ltd reported a 43 per cent decline in consolidated profit after tax to Rs 41.49 crore in the fourth quarter ended on March 31, 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.