குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

ரீநியூ எனர்ஜியின் லாபம் 75% சரிவு!

ரீநியூ எனர்ஜி குளோபல் நிறுவனத்தின் நிகர லாபம், 75 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து ரூ. 77.7 கோடியாக சரிந்துள்ளது.

News image
Updated On :58 நிமிடங்கள் முன்பு

புதுதில்லி: ரீநியூ எனர்ஜி குளோபல் பிஎல்சி நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் 2026் உடன் முடிவடைந்த காலாண்டில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 75 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து ரூ. 77.7 கோடியாக குறைந்துள்ளது.

2025 நிதியாண்டின் 4வது காலாண்டில் இது ரூ. 313.7 கோடியாக இருந்தது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையைச் சேர்ந்த இந்நிறுவனம், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டிற்கான தனது மொத்த வருமானம் ரூ. 3,954.8 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 3,439.1 கோடி ஈட்டியது.

எனினும், 2026 நிதியாண்டு முழுமைக்கும் கணக்கிடுகையில், வரிக்குப் பிந்தைய லாபம் இருமடங்கிற்கும் மேலாக உயர்ந்து ரூ. 1,038.5 கோடியாக இருந்தது. மார்ச் 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில், இது ரூ. 459.1 கோடியாக இருந்தது.

2026 நிதியாண்டிற்கான மொத்த வருமானம் ரூ. 15,063.5 கோடியாக இருந்த நிலையில், 2025 நிதியாண்டில் இது ரூ. 10,907 கோடியாக இருந்தது.

2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் மின் விற்பனை மூலம் ஈட்டிய வருவாய் ரூ. 1,835.8 கோடியாகவும், 2025 நிதியாண்டின் 4வது காலாண்டில் இது ரூ. 1,841.4 கோடியாகவும் இருந்தது.

2026 நிதியாண்டு முழுமைக்கும், மின் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 88,196 கோடியாக இருந்த நிலையில், 2025 நிதியாண்டில் இது ரூ. 8,160.6 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

ReNew Energy Global net profit declined over 75 per cent year-on-year to Rs 77.7 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.