

தேவையானவை:
உருளைக்கிழங்கு- 1/2 கிலோ, வெங்காயம்- 2, வாழைக்காய்-4, மல்லித்தழை- 1 கட்டு, இஞ்சி- 1 துண்டு, பச்சை மிளகாய்- 4, மிளகாய்த்தூள்- 50 கிராம், தனியாத்தூள்- 25 கிராம், ரொட்டித்தூள்- 2 மேஜைக்கரண்டி, கரம் மசாலா- 1 தேக்கரண்டி, நெய் அல்லது எண்ணெய்- 100 கிராம், உப்பு- தேவையான அளவு
செய்முறை :
வேக வைத்துத் தோலுரித்த உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய் இரண்டையும் நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் பொன்னிறமாக வதக்கிக் கொண்டு அதனுடன் உருளைக்கிழங்கு விழுது, வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித்தழை, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, பொடியாக நறுக்கி இஞ்சி ஆகியவற்றை சேர்த்துப் பிசைய வேண்டும். கலவையைச் சிறுசிறு உருண்டைகளாக்கி வடை போல் தட்டிக் கொண்டு, ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து நெய் அல்லது எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.