தற்போது இயற்கை உரம் விவசாயத்திற்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.விவசாயத் தேவைக்கு அதிக
அளவிலான உரம் தேவைப்படும். ஆனால் வீட்டுத் தோட்டம் அமைத்திருப்பவர்களுக்கு, குறைந்த அளவிலான இயற்கை உரமே போதும். தற்போது வீட்டிலேயே எளியமுறையில் குறைந்த அளவில் இயற்கை உரம் தயாரிக்க, கம்பா வந்துவிட்டது. அதென்ன கம்பா?
ஆந்திராவில் மண்ணில் தயாராவதுதான் இந்த கம்பா, சிறிய வீடானாலும் வைத்துக் கொள்ளும் வசதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 4அடி உயரமும், சுமார் 1 அடி அகலமும் கொண்டது இந்தக் கம்பா. மூன்று அடுக்கு கொண்ட இதில் பல சிறிய துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு அடுக்கில்,கீழ் பகுதியில் பிளாஸ்டிக் கயிறினால் காகிதம் கீழே விழாமல் இருக்க கட்டப்பட்டுள்ளது.
இந்த கம்பாவை விருதுநகர் மாவட்டம் சிவகாசி வேலாயுதம் சாலை சிவிக் எக்ஸ்னோராவினர் பள்ளிகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார்கள். இது குறித்து எக்ஸ்னோரா செயலாளர் லதா
அபிரூபன் கூறியதாவது:
""இந்தக் கம்பாவைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கும் முறையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தொடக்கத்தில் மேல்பகுதியில்,அடிப்புறத்தில் காகிதத்தை பரப்பி விட வேண்டும். பின்னர் அதில் சமையல் அறைக் கழிவுகள், சுவாமி படத்திற்கு போடப்பட்ட பூக்களைப் போட்டு மக்க வைக்கும் நுண்ணுயிரைத் தூவ வேண்டும். இதையடுத்து தினசரி இலை,மற்றும் முட்டை ஓடு, காய்கறி கழிவுகள் போன்றவற்றைப் போட்டு, ஒரு மரக்குச்சியால் தினசரி கிளறி விட வேண்டும். 15 நாளில் மேல்பகுதி நிரம்பிவிடும். பின்னர் இரண்டாம் பகுதியிலும், கீழ்பகுதியில் காகிதத்தை பரப்பி, முதலில் நிரம்பிய குப்பைகளை இதில் கொட்டிவிட வேண்டும். குப்பை மக்க, மக்க அளவு குறைந்து கொண்டே வரும். முதலில் உள்ள பகுதியில் எப்போதும் போல குப்பைகளைப்போட்டு கிளறிக் கொண்டே இருக்கலாம். இரண்டாம் பகுதியில் போட்ட குப்பைகளை 15 நாள் கழித்து மூன்றாம் பகுதிக்கு மாற்றிவிட வேண்டும். மூன்றாம் பகுதியில் 15 நாள் வைத்திருந்து வெளியே எடுத்துவிட்டால் இயற்கை உரம் தயார். இப்படியே மூன்று அடுக்கிலும் உரம் தயாரிக்க 45 நாட்கள் ஆகும். பின்னர் இதனைத் தோட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். வீட்டில் வைத்திருந்தாலும் இதில் துர்நாற்றம் வராது. உரம் தேவை இல்லாதவர்கள், பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்து விடலாம். இதனால் வீட்டுக் கழிவுகளை வீணாக்காமல் உரம் தயாரிக்கலாம். இதன் எடை சுமார் 7 கிலோ இருப்பதால் சுலபமாக வேறு இடங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம். தற்போது இது பெங்களூரிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்விலை சுமார் ரூபாய் 2000 ஆகும்.
இந்த கம்பாவை நாங்கள் பெங்களூரில் வாங்கினோம். வீட்டிலும் இயற்கை உரம் தயாரிக்கலாம் என்ற விழிப்புணர்வையும், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு இந்த கம்பாவை இலவசமாக வழங்கி வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் இதனைப் பயன்படுத்தினால், குப்பைகள் பெருமளவு சேருவது குறைந்துவிடும்.
பிளாஸ்டிக் கழிவுகள் தற்போது மிகப்பெரிய சவாலாக உள்ளன. ஒவ்வொரு நகராட்சியிலும் வாரம் ஒருநாள் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்குவதற்கு தனி ஆட்களை நியமிக்க வேண்டும். பொதுமக்களும் வீடுகளில் பிளாஸ்டிக் கழிவுகளை தனியே வைத்திருந்து, நகராட்சி துப்பரவு பணியாளர் வரும் போது கொடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகத்தினர் அந்த பிளாஸ்டிக் கழிவுகளை, பிளாஸ்டிக் சாலை அமைக்கப் பயன்படுத்தலாம். இந்தத் திட்டத்தை அனைத்து நகராட்சியிலும் அமுல்படுத்தினால், பிளாஸ்டிக் கழிவுகளுக்குத் தீர்வு ஏற்படும். நாங்கள் தற்போது எங்கள் பகுதியில், வாரம் ஒருநாள் வீடு வீடாகச் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கத் திட்டமிட்டுள்ளோம். சுமார் 400 வீடுகளுக்கு சென்று வீட்டில் உள்ள பெண்களிடம் "பிளாஸ்டிக் கழிவுகளை தனியே வைத்திருந்து, எக்ஸ்னோரா துப்பரவுத் தொழிலாளி வரும் போது கொடுப்போம் என்ற உறுதி மொழிபடிவத்தில் கையெழுத்து வாங்கியுள்ளோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் பிளாஸ்டிக் கழிவுகள் பெரியபிரச்னையே இல்லை'' என்றார் லதாஅபிரூபன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

திமுக பொய் பிரசாரம்: அதிமுக நிா்வாகி ஆட்சியரிடம் புகாா்

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


