திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

5 ரூபாய்க்கு ஃபில்டர் காபி!

பால், சர்க்கரையின் விலை உயர்ந்துள்ள நிலையில், சிதம்பரத்தில், முதியவர் ஒருவர் ரூ.5-க்கு சுவையான ஃபில்டர் காபி விற்பனை செய்கிறார்.

News image
Updated On :16 ஜூன் 2013, 4:42 am

ஜி.சுந்தரராஜன்

பால், சர்க்கரையின் விலை உயர்ந்துள்ள நிலையில், சிதம்பரத்தில், முதியவர் ஒருவர் ரூ.5-க்கு சுவையான ஃபில்டர் காபி விற்பனை செய்கிறார்.
 கடலூர் குமாரபேட்டையைச் சேர்ந்தவர் சி.கே.ஜெயராமன் (65). இவரது பூர்வீகம் சிதம்பரம். கடலூர் குமாரபேட்டையில் மகள் வீட்டில் மனைவி ஜே.பானுமதியுடன் வசிக்கிறார்.
 இருப்பினும் தினமும் பஸ்ஸில் வந்து சிதம்பரம் ரயில்வே பீடர் ரோட்டில் காபிக் கடையை நடத்திவிட்டு இரவு கடலூர் செல்கிறார்.
 இதுகுறித்து சி.கே.ஜெயராமன் தெரிவித்தது:
 ""தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை காபி விற்பனை நடக்கிறது.
 நாள் ஒன்றுக்கு 15 லிட்டர் பால் வாங்கி காபி தயாரிக்கிறேன். குறைந்தது சுமார் 500 காபிக்கு மேல் விற்பனை செய்வதால் ரூ.5 விலை கட்டுப்படியாகிறது. லாபமும் கிடைக்கிறது''என்கிறார்.

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.