ஐம்பதுக்கும் மேற்பட்ட கைத்தொழில் பயிற்சிகளை எங்கள் நிறுவனம் அளித்து வருகிறது என்பதைவிட 3000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோரை உருவாக்கியிருக்கிறது என்பதில்தான் எங்களுக்கு சந்தோஷம். அதோடு எங்களுடைய தாகம் நின்றுவிடவில்லை மேலும் மேலும் வறுமையில் வாடும் பல பெண்களை தொழில் முனைவோர் ஆக்க வேண்டும் என்பதே எங்களது ஆசை. தொழில் என்றதும் பெரிய முதலீடு செய்ய வேண்டுமே என்று சிலர் எண்ணுவார்கள். அப்படி இல்லாமல் தன்னம்பிக்கை இருந்தால் நீங்களும் தொழிலதிபர் ஆகலாம். ரூபாய் 500 முதல் ரூபாய் 15000 வரை முதலீட்டில் என்னென்ன தொழில்களை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். அதற்காக சில யோசனைகளை தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்கிறார் சுகா தொண்டு நிறுவனத்தின்
நிறுவனர் உமாராஜ்.
ரூபாய் 500 முதலீட்டில் டயட் சிறுதானிய உடனடி உணவு: தற்போது அனைவரும் சத்தான உணவு உட்கொள்ள விரும்பிகின்றனர். இதனை நிதானமாக தயாரிப்பதற்கு தேவையான நேரம் இந்த அவசர யுகத்தில் கிடைப்பதில்லை. அதனால் அவர்களுக்கு ஏற்றவாறு சிறுதானியங்களை கொண்டு உடனடி உணவு தயார் செய்து விற்பனை செய்யலாம்.
சப்பாத்தி: வேலைக்கு செல்வோர், வயதானவர்கள், பேச்சிலர்கள் அனைவரும் இரவு நேர உணவாக சப்பாத்தியை விரும்புவர். இதனை நீங்கள் உள்ள பகுதியில் ஆர்டர் வாங்கி செய்து கொடுப்பதனால் நமக்கு தேவையான பணம் கிடைக்கும்.
கூட்டு, பொரியல், சாம்பார், குழம்பு வகைகள்: நிறைய பேருக்கு நேரம் இல்லாத காரணத்தினால் விதவிதமாக கூட்டுப் பொரியல் சாப்பிட ஆசை இருக்கும்; செய்ய நேரம் கிடைக்காது. ஓட்டல் உணவு உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. ஆதலால் வீட்டில் தயார் செய்த கூட்டு, பொரியல், சாம்பார், குழம்பு ஆகியவற்றை மட்டும் விற்பனை செய்தால் மக்கள் விரும்பி வாங்குவர். (தரம் முக்கியம்)
அறுகம்புல், கற்றாழை சாறு: தற்போது காலை வேளையில் ஏராளமான மக்கள் நடைபியிற்சி செய்கின்றனர். அவர்களுக்கு ஏற்ப அறுகம்புல் சாறு, கற்றாழை சாறு போன்ற பலவித சத்தான சாறுகளை தயாரித்து மக்கள் நடைபயிற்சி செய்யும் இடங்களில் விற்பனை செய்யலாம்.
டீ, காபி, வடை, சமோசா: சிறிய, சிறிய தொழிற் கூடங்களில் கேன்டீன் வசதி இருக்காது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வெளியில் சென்று டீ சாப்பிட நேரமும் இருக்காது. அதுபோன்ற இடங்களில் டீ, காபி, வடை, சமோசா போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்யலாம். ( டீ கேன் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வு
பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

கோடங்கிபோல நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்த இருவா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய இருவா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


