நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கல்விச் சேவை!

மூன்று ஆண்டுகளாக கல்வியில் மிகவும் பின்தங்கிய கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள கிராமப்புற மாணவ, மாணவியர்களுக்கு கல்வியின் அவசியத்தை பற்றியும்,

News image
Updated On :9 பிப்ரவரி 2014, 2:35 am

ஜி.சுந்தரராஜன்

மூன்று ஆண்டுகளாக கல்வியில் மிகவும் பின்தங்கிய கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள கிராமப்புற மாணவ, மாணவியர்களுக்கு கல்வியின் அவசியத்தை பற்றியும், தொழில் சார்ந்த கல்வியின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் குக்கிராமத்தில் பிறந்த
 நிர்மலா.
 சிதம்பரம் அருகே எறும்பூர் கிராமத்தில் ஆர்.கோதண்டராமன்-கௌரி தம்பதி
 யினரின் மகள்
 கே.நிர்மலா.
 டிப்ளமா இன் எலக்டிரிகல் மற்றும் எலக்டிரானிக்ஸ் படித்து முடித்த இவர், சிதம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள சுமார் 40 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 10-வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்விற்கு படிப்பது மற்றும் அதிக மதிப்பெண்கள் எடுப்பது குறித்த தன்னம்பிக்கை பயிலரங்கம் (டர்ஜ்ங்ழ் ர்ச் ள்ன்ஸ்ரீஸ்ரீங்ள்ள்) நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
 கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களை பாடவாரியாக தொகுத்து, ஒவ்வொரு பாடத்திற்கும் தனியார் நிறுவனங்களில் உதவி பெற்று, தனித்தனியே புத்தக வடிவில் அச்சிட்டு இலவசமாக கிராமப்புற மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வருகிறார். இந்தக் கல்வி ஆண்டில் சிதம்பரம் நகரைச் சுற்றியுள்ள சுமார் 20 பள்ளிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளஸ்டூ மாணவ, மாணவியர்களுக்கு இலவச வினா வங்கி புத்தகங்களை வழங்கியுள்ளதுடன், பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் டூ மாணவர்களுக்கு அச்ற்ங்ழ் 2 என்ற இலவசக் கையேட்டையும் தயாரித்து வழங்கியுள்ளார்.
 சூழ்நிலை காரணமாக படிக்க இயலாத மாணவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கி கொள்ள சில குறுகிய கால பயிற்சியின் மூலம் சிறுதொழில் தொடங்க உதவுவதுடன், ஆண்டுக்கு சுமார் 50 மாணவர்களுக்கு தனது கணினி பயிற்சி நிறுவனத்தின் மூலமாக இலவச பயிற்சியும் வழங்கி, சான்றிதழுடன், வேலைவாய்ப்பையும் பெற்றுத் தந்து வருகிறார்.
 இதுகுறித்து நிர்மலா தெரிவித்தது:
 ""தொழில் சார்ந்த கல்வி குறித்து கிராமப்புற மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு இல்லாததே வேலையில்லாமல் இருப்பதற்குக் காரணம்.
 எனவே தொழில் சார்ந்த கல்வி குறித்தும், திறமைக்கேற்ற கல்வி பயிலுவது குறித்தும் கிராமப்புற மாணவ, மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சி மூலம் விளக்கமளித்து வருகிறேன்.
 மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிக்க வேண்டும் என்பதையும் தன்னம்பிக்கை நிகழ்ச்சி மூலம் அறிவுறுத்தி வருகிறேன்'' என்கிறார் நிர்மலா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.