மணப்பெண்ணுக்கான நகைகள் தயாரிப்பு!
தங்க நகைகளே தோற்று போகும்படியான குந்தன் நகைகள், ஆன்டிக் நகைகள், டெம்பிள் நகைகள் எனப் பல வகையான பேஷன் நகைகள் தற்போது வந்துவிட்டன, இருந்தாலும் திருமணத்தன்று


தங்க நகைகளே தோற்று போகும்படியான குந்தன் நகைகள், ஆன்டிக் நகைகள், டெம்பிள் நகைகள் எனப் பல வகையான பேஷன் நகைகள் தற்போது வந்துவிட்டன, இருந்தாலும் திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு அணிவிக்கும் "பிரைடல்' நகைகளுக்கு தனி மவுசுதான். காரணம், எத்தனை தங்க நகை அணிந்திருந்தாலும், ஒரு நாள் கூத்துக்கு மணப்பெண்கள் இந்தவகை பேஷனான "பிரைடல் செட்' நகைகளையே விரும்புகிறார்கள், அதனால் என்ன விலையானாலும் திருமணநாளுக்கு முன்கூட்டியே இந்த நகைகளை தேடிச் சென்று நல்ல டிசைனாக பார்த்து வாடகைக்குப் பதிவுச் செய்வது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது. அப்படிப்பட்ட இந்த பிரைடல் நகைகள் தயாரிப்பில் அசத்தி வருகிறார் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அமுல்யா. அவரை சந்தித்தோம்:
""எம்.எஸ்.சி. பயோகெமிஸ்ட்ரி படித்துவிட்டு ஹைதராபாத்தில் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் வேலை செய்தேன். நல்ல சம்பளம் கிடைத்தாலும் திருப்தி இல்லை, சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமே மனதில் இருந்தது. எனக்கு இயல்பிலேயே கலைநயம் உள்ள டிசைனிங் வேலைகள் ரொம்ப பிடிக்கும். அதனால் அதுபோன்ற வேலையாக தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்தகாலகட்டத்தில்தான்
ஜுவல்லரி மேக்கிங் பிரபலமாகி வந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ஆளாளுக்கு டிசைன் நகைகள் தயாரிப்புகள் துவங்கி இருந்தனர்.
ஆனாலும் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் எவ்வளவு பேர் புதிதாக இந்தத்துறையில் இருந்தாலும் நிச்சயம் ஜெயிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஹைதராபாத் நகைகள், ஆன்டிக் நகைகள், பேப்பர் நகைகள், பட்டுநூல் நகைகள், குந்தன் நகைகள் என நிறையபேர் தயாரித்து வந்தார்கள். இதிலிருந்து என்ன வித்தியாசம் கொண்டு வரலாம் என்று யோசித்ததேன். மணப்பெண்களுக்குகான "ஸ்பெஷல் பிரைடல்' நகைகள் தயாரிப்பு செய்யலாம் என்ற எண்ணம் உதித்தது.
அதனால் இந்தவகையான நகை தயாரிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு மணப்பெண்களுக்கான நெக்லஸ், லாங் செயின், நெற்றிச்சுட்டி, கம்மல், மூக்குத்தி, ஹாரம், கைகளில் அணியும் ஆம்லட் என அத்தனை அயிட்டங்களையும் தயாரித்தேன். நல்ல வரவேற்பு. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக இதையே முக்கியத் தொழிலாக செய்து வருகிறேன்.
இத்தனையும் உள்ள ஒரு செட்டை வெளியில் வாங்கினால் குறைந்தது ரூ.3 முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவு ஆகும். அதை நாமே தயாரித்தால் குறைந்தபட்சம் 1000 ரூபாய் இருந்தால் போதும். ஒரு நாளில் ஒரு முழு செட்டையும் செய்து விட முடியும். மேலும் இந்த நகைகளை செய்து வாடகைக்கு கொடுத்தால், ஒருநாள் வாடகையே ரூ.1000 முதல் 2 ஆயிரம் வரை கிடைக்கும். அதுபோன்று ஆடம்பரமாகவும், விதவிதமாக அழகான நகைகள் அணிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த நகைகள் பெஸ்ட்.
இது தவிர, குந்தன் வகை நகைகள், டெம்பிள் நகைகள், அலுவலகம் செல்லும் பெண்கள், கல்லூரி பெண்களுக்கு ஏற்றபடி ஸ்டைலான நகைகளையும் தயார் செய்கிறோம். இந்த நகைப் பயிற்சி எடுத்து கொள்ள விரும்புபவர்களுக்கு பயிற்சியும் அளித்து ஒரு செட் நகைகளை அவர்களிடமே கொடுத்தும் விடுகிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...