பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்.." என்று பாரதி பாடியது இந்தியாவில் பலிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், சென்னை சட்டக் கல்லூரி மாணவி பார்கவி கண்ணனுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு மிக மிக அரிதானது.
பார்கவி கண்ணன் இந்தியாவிலேயே சிறந்த சட்டக்கல்லூரி மாணவி என்ற விருதினை அண்மையில் பெற்றிருக்கிறார். அந்த விருதுடன் ரூ. 32 1/2 லட்சம் கல்வி உதவித்தொகையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் தனது சட்ட மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்குப் பறக்க ரெடியாகிக் கொண்டிருக்கிறார் பார்கவி கண்ணன்.
சர்வதேச அளவில் சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான "மாதிரி நீதிமன்ற போட்டி' டில்லியில் சென்ற பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் "ஸார்க்' நாடுகளைச் சேர்ந்த முப்பது சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் பல சுற்றுகள் இருந்தன. இறுதி சுற்றில் இலங்கை அணியுடன் சென்னை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக்கல்லூரி மாணவிகளான பார்கவி கண்ணன், பகவதி வெண்ணிமலை, வி.எம்.ஐஸ்வர்யா லட்சுமி, சமீனா சையத் அடங்கிய குழு போட்டி போட்டு, வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், சிறப்பாகச் செயல்பட்ட இறுதி ஆண்டு மாணவி பார்கவி கண்ணனுக்கு, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க உதவித்தொகையாக 50 ஆயிரம் அமெரிக்க டாலர் ( சுமார் முப்பத்திரண்டரை லட்சம்) வழங்கப்பட்டது.
""சட்டம் படிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. பிளஸ் டூ முடித்ததும் சட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்று அடம் பிடித்து பெற்றோரைச் சம்மதிக்க வைத்தேன்' என்கிறார் பார்கவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


