இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அக்கம்பக்கம்

1913-ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவராக உட்ரோ வில்சன், வயதான காதுகேளாத தனது அத்தையைப் பார்க்கப் போனார். அந்த அத்தைக்கு உலக நடப்புகள் அவ்வளவாகத் தெரியாது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2019, 10:11 am

மயிலை மாதவன்

என்ன வேலையில் இருக்கிறாய்?

1913-ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவராக உட்ரோ வில்சன், வயதான காதுகேளாத தனது அத்தையைப் பார்க்கப் போனார். அந்த அத்தைக்கு உலக நடப்புகள் அவ்வளவாகத் தெரியாது.
""இப்பொழுது என்ன வேலையில் இருக்கிறாய் உட்ரோ?'' என்று கேட்டார் அந்த காது கேளாத அத்தை.
""நான் இப்போது தலைவராக இருக்கிறேன்.''
""எதற்கு?''
""ஐயோ! அத்தை நான் இப்பொழுது குடியரசுத்தலைவர். ஜனாதிபதி. ஐக்கிய அமெரிக்க நாட்டின் தலைவர்.''
""போ, உட்ரோ உனக்கு எப்போதும் குறும்புதான். முட்டாள் தனமாக எதையாவது பேசாதே. உண்மையைச் சொல்.'' 
பாவம் உட்ரோ வில்சன். அவருக்கு எப்படி விளங்க வைப்பது என்று தெரியாமல் விழித்தாராம்.

சிங்கப்பூரில் தமிழர்

இன்றைய சிங்கப்பூரின் வான் உயர்ந்து நிற்கும் கட்டடங்களைப் பார்த்து பிரமிக்கும் அனைவருக்கும் ஓர் ஆச்சரியமான உண்மை. அது சிங்கப்பூரின் ஆரம்ப கட்டடக்கலைக்கு அடிக்கல் நாட்டியவர், நாராயணபிள்ளை என்ற தமிழர். இவர் 1819-ஆம் ஆண்டு ராபில்ஸ் என்ற ஆங்கிலேயருடன் சிங்கப்பூருக்கு வந்து இறங்கினார். சிங்கப்பூருக்கு வந்த முதல் தமிழர் என்ற பெருமை நாராயணபிள்ளைக்கு உண்டு. சிங்கப்பூர் அரசாங்க கருவூலத்தில் தலைமை குமாஸ்தாவாக சேர்ந்து சிங்கப்பூரின் முதல் கட்டட கான்ட்ராக்டராக உயர்ந்தார். இன்று சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இண்டியா பகுதியில் இருக்கும் ஸ்ரீமாரியம்மன் கோயில், இந்த நாராயணபிள்ளையால் உருவாக்கப்பட்டது தான். சிங்கப்பூரின் அரசு கலாசார சின்னமாக இந்த கோயில் உள்ளது. 

மகாத்மா காந்தி 1927-ஆம் ஆண்டு விருதுநகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். அப்போது தேசபக்தர் கே.பி.சங்கரலிங்க நாடார் காந்தியுடன் நெருங்கிப் பழகினார். ஊருக்குப் புறப்படும்போது ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டுத் தருவதாக வாங்கிச் சென்றார் காந்திஜி. நான்கு மாதங்கள் கழித்து வார்தாவில் இருந்து அப்புத்தகம் திரும்பி வந்தது. அதில் "அன்புள்ள சங்கரலிங்கம், தங்கள் புத்தகத்தை இத்துடன் திருப்பி அனுப்பியுள்ளேன். இந்தப் புத்தகத்தை யார் எடுத்துக் கொண்டு போனாலும் சொந்தக்காரரிடம் திருப்பிக் கொடுத்துவிடவும்' என்று முன் பக்கத்தில் தாங்கள் எழுதியுள்ள குறிப்பை கவனித்தேன். இப்படிக்கு மோ.க. காந்தி என்று குறிப்பிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.