இந்தியாவிலும், தமிழகத்திலும் பல விநோதமான கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமமும் முன்மாதிரி கிராமங்களாக விளங்குகின்றன. அவற்றைப் பற்றி சிறு தொகுப்பு இது:காலணி அணியாத கிராமம்மதுரைக்கு அருகேயுள்ள உள்ளது அண்டமான் கிராமம். இந்த ஊரிலுள்ள மக்கள் காலணி அணிவதில்லை. ஊரின் எல்லையை தாண்டிய பிறகு தான் காலில் காலணி அணிந்து செல்கிறார்கள். கார், பைக் வைத்திருப்பவர்களும் இந்த விதியை இப்போது கடை பிடிக்கிறார்கள்.
இந்த ஊரில் குடிசைகள் கிடையாது. அவரவர் வசதிக்கு ஏற்ப வாழ்கிறார்கள். ஆனால் இந்த வழக்கத்தை மட்டும் இன்னும் கூட கடைப்பிடித்து வருகிறார்கள்.
நேர்மையான கிராமம் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ளது பாப்பணம் என்கிற கிராமம். கடந்த மூன்று தலைமுறைகளாக இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாது. கதவு வைத்து வீடுகளை அமைத்தால் கடவுளை அவமதித்தது போலாகும் என்கின்றனர் ஊர்மக்கள்.
வெளியூருக்குச் செல்லும் குடும்பத்தினர் வாசலுக்கு மேலுள்ள சிறு சன்னல்களில் நூலைக் கட்டி அதில் திரைபோன்ற துணியை மறைவாகத் தொங்க விடுகின்றனர். அது காற்றில் பறந்து விடாமல் இருக்க கீழே நான்கு ஐந்து செங்கற்களை வைத்துவிடுகின்றனர். இதனால், நாய், கோழி, மாடு போன்றவை உள்நுழையாதாம்.
பாப்பணம் கிராமத்தில் இதுவரை பகலிரவு என எந்த நேரங்களிலும் எவ்விதமான பொருளும் களவு போனதில்லை என்கின்றனர் மக்கள். திருட்டு பயம் என்பது துளியும் கிடையாது. எல்லோரிடமும் நேர்மை இருப்பதே இதற்கு காரணம் என்கின்றனர்.
சுத்தமான கிராமம்
கடவுளின் தோட்டம்' என்கிற செல்லப்பெயரைப் பெற்றுள்ளது மேகாலயா மாநிலத்தின் "மாவ்லின்னாங்' கிராமம். ஷில்லாங்கிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இயற்கை எழில் சூழ்ந்த கிராமம், 2003-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை "ஆசிய கண்டத்தின் சுத்தமான கிராமம்' என்கிற விருதை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இங்குள்ள பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம் போல "சுத்தம்' என்பதும் ஒரு பாடமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. எங்கே குப்பையிருந்தாலும், இக்கிராமத்தில் உள்ள 95 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேரில் யார் வேண்டுமானாலும் பாரபட்சமின்றி கையில் விளக்குமாறைப் பிடித்து சுத்தம் செய்யத் தொடங்கி விடுகின்றனர்.
பறவைகளை காதலிக்கும் கிராமம்
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கிராமம் காக்ரிபெல்லூர். இவ்வூரில் பறவைகளுக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அரிய வகைப் பறவைகளை நேசிப்பதோடு, அவை வசிக்கவும் இந்த மக்கள் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர். மேலும், காயமடைந்து வரும் பறவைகளுக்கு இக்கிராமத்தினர் சிறப்பு சிகிச்சையும் அளிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


