பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அப்துல்கலாம்  வழியில் ஆசிரியர்

கலாம் வழியில் ஆசிரியப்பணியில் தனது 25-ஆவது வயதில் அடியெடுத்து வைத்து; 33 ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு அரசுப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என பல பொறுப்புகளை

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 1:00 pm

எஸ். வெட்கட்ராமன்

கலாம் வழியில் ஆசிரியப்பணியில் தனது 25-ஆவது வயதில் அடியெடுத்து வைத்து; 33 ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு அரசுப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என பல பொறுப்புகளை வகித்து;இன்று தான் படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று; அப்பணியினை திறம்படச் செய்து வருகிறார் சிவ. இராம. இரவிச்சந்திரன். அவர் பணிபுரிவது காஞ்சி மாவட்டத்தில் எடையார்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியாகும்.இது தான் இவர் படித்த பள்ளி. ஆசிரியப்பணிக்கு சேர்ந்தபோது சாதாரண பட்டதாரியாக இருந்தவர்; படிப்பின் மீதிருந்த பிடிப்பினால் அஞ்சல்வழிக்கல்விமூலம்பயின்று  பொருளியியல்மற்றும் கல்வியியலில் முதுகலை பட்டதாரியாக  தன்னைத் தகுதி படுத்திக்கொண்டார்.

இவரது பெற்றோர்கள் இருவருமே ஆசிரியராகப் பணியாற்றிப் பெருமை சேர்த்தவர்கள். இவரது மனைவி ஜெயந்தி ரவிச்சந்திரனும் காஞ்சி மாவட்டத்தில் ஒண்டிகுடிசை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். மொத்தத்தில் இவருக்கு ஆசிரியர் குடும்பம்” என்ற அடையாளம் தொற்றிக்கொண்டது.

1987-இல் ஆசிரியர் பணிக்கு சேர்ந்த நாள் முதல்இதுவரைபள்ளிக்கு ஒரு நாள் கூட தாமதமாகச் சென்றது கிடையாது. பள்ளி நேரத்தில் சொந்த வேலைக்காக அனுமதி  பெற்றதில்லை. ஏன், தனது திருமணத்திற்காக ஒரு நாள் மட்டும்விடுப்பு எடுத்துக்கொண்ட  மறுநாளே பள்ளிப் பணிக்குத் திரும்பிவிட்டார்.

தமிழ், ஆங்கில, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்து பாடங்களிலும் வகுப்பு எடுத்துள்ளார். நூறுசதவிகித தேர்ச்சி, அதிக மதிப்பெண்கள் என்ற இலக்கிலேயே பணியாற்றி வருகிறார். 2013-ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் இவரைத்தேடி விருதுகளும், பாராட்டுக்களும் வர ஆரம்பித்தன.2019-ஆம் ஆண்டில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதினை பெற்றார்.

தலைமை ஆசிரியர் பணிகளுடன், பள்ளியில் தூய்மைப்பணி, கழிப்பிட வசதிகள், ஆய்வகம், கணிணி வசதி என பலவகையிலும் மேம்படையச் செய்து தான் படித்த பள்ளியின் பெருமையைப் பல மடங்கு உயர்த்தியுள்ளார். இவரது பள்ளிக்கு "தூய்மைப்பள்ளி" என்ற விருது கிடைத்துள்ளது.

பள்ளி மாணவர்களிடமிருந்து கட்டணம் ஏதும் வாங்காமல், அரசாங்கத்திற்கு மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தைத் தானே தன் சொந்த பணத்திலிருந்து கொடுத்து வருகிறார். சமுதாயதிற்காக, அயராத ஆசிரியப்பணி ஆற்றிவருவதற்கு நடுவே, காஞ்சி மாநகருக்கு கோயில் தரிசனம் செய்ய தன்னைத் தேடிவரும் அன்பர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துத்தருவதன் மூலம் ஆன்மிகபணியிலும் தன் கவனத்தைச் செலுத்தி வருவது பாராட்டுதலுக்கு உகந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.