சங்கரதாஸ் சுவாமிகள் ஒருமுறை தூத்துக்குடி அருகில் ஒரு கிராமத்தில் நடந்த நாடகத்தில் எமதர்மன் வேடத்தில் நடித்துவிட்டு காலையில் ஊருக்கு அருகில் உள்ள கிணற்றில் வேடத்தைக் கலைப்பதற்காக குளிக்கச் சென்றார். அப்போது அங்கு தண்ணீர் எடுக்க வந்த ஒரு பெண், சங்கரதாஸ் சுவாமிகளைப் பார்த்தவுடன் எமதர்மராஜாதான் வந்துவிட்டார் என்று எண்ணி பயந்து போய் மயங்கி விழுந்து அதிர்ச்சியில் இறந்தே போய்விட்டார். இச்சம்பவத்தைப் பார்த்த சங்கரதாஸ் சுவாமிகள் மிகுந்த வேதனையடைந்து கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை.
அதைப்போலத்தான் பாபநாசம் சிவன், ஒருமுறை ஒரு திருக்கோயில் இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவில் கோயிலைவிட்டு சிவன் கோலத்திலேயே வெளியே வந்தார். அவரைப் பார்த்த பக்தர்கள், சிவன்தான் வந்துவிட்டார் என்று எண்ணி அவரை ஓடி வந்து வணங்கினார்களாம். அன்று முதல் ராமய்யா என்ற பெயரை சிவன் என்று மாற்றிக் கொண்டார்.
- எஸ்.கணேசன் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி.