யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாஸ்டர் பாடலுக்கு  பாராட்டு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "மாஸ்டர்' படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

News image
Updated On :12 ஜூலை 2020, 12:30 am

DIN


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "மாஸ்டர்' படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப் படத்திலிருந்து முதல் பாடலான "குட்டி ஸ்டோரி' பாடல் பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி வெளியானது. இரண்டாவது பாடலாக, "வாத்தி கம்மிங்' பாடல் மார்ச் தொடக்கத்தில் வெளியானது. சென்னை வட்டார வழக்கில் அமைந்துள்ள வரிகளுடன் இந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

"மாஸ்டர்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் "வாத்தி ரெய்டு' மார்ச் 14 - ஆம் தேதி வெளியானது. விஜய் ரசிகர்களும் இசை ரசிகர்களும் இப்பாடலை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை ஒன்றரை கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்திருக்கும் அப்பாடல் குறித்து,தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு சிரிஷ், "வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு.. ஆன் ரிப்பீட்' என்று சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். இது விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. "மாஸ்டர்' படத்தை செவன் ஸ்கிரீன் சார்பில் லலித் வெளியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.