மீண்டும் வருவேன் காத்திருங்கள்: இர்பான் அலிகான்
ஜெய்ப்பூரில் நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்த இர்பான்அலிகான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால் சி.கே.நாயுடு கிரிக்கெட் குழுவில் சேர்ந்து விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்.


ஜெய்ப்பூரில் நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்த இர்பான்அலிகான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால் சி.கே.நாயுடு கிரிக்கெட் குழுவில் சேர்ந்து விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், போட்டிகளுக்காகப் பயணம் மேற்கொள்ளப் பணமில்லாததால் கிரிக்கெட் ஆடுவதை விட்டுவிட்டு நடிப்புத்துறையில் கவனம் செலுத்த தொடங்கினார்.
1984-ஆம் ஆண்டு டெல்லியில் நஸ்ருதின் ஷா தலைவராக இருந்த தேசிய நாடகப் பள்ளியில் சேர அழைப்பு வந்ததால், ஆசிரியர் வேலை கிடைத்திருப்பதாகத் தன் அம்மாவிடம் பொய் சொல்லி, நண்பர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு டெல்லிக்குக் கிளம்பிவிட்டார்.
தேசிய நாடகப் பள்ளியில் உடன் பயிற்சிப் பெற்ற கதாபா சிக்தர் என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இர்பான், 1988-ஆம் ஆண்டு முதன்முதலாக மீரா நாயரின் "சலாம் பாம்பே' படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். "ஹாஸில்' என்ற படத்திற்குப் பின்னரே இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. இந்தியில் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். முகபாவம் மூலமாகவே நடிப்பை வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்ததால் ரசிகர்களின் ஆதரவு பெருகியது.
இந்தியில் இவர் நடித்த "பான்சிங் தோமர்' சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது. "மக்பூல்', "லைப் இன் எ மெட்ரோ', "தி லஞ்ச் பாக்ஸ்', "தால்வார்' போன்ற இந்தி படங்களும், "ஜூராசிக் வோர்ல்ட்', "தி அமேஸிங் ஸ்பைடர் மேன்', "இன்பெர்னோ', "ஸ்லம் டாக் மில்லியனர்', "லைப் ஆப் பை', "எ மைட்டி ஹார்ட்' போன்ற ஆங்கிலப் படங்களும் இவரது நடிப்பாற்றலை வெளிபடுத்தியப் படங்களாகும்.
2018-ஆம் ஆண்டு தனக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த இர்பான், சிகிச்சைக்காக லண்டன் சென்ற போது அங்கு இவர் கடைசியாக நடித்த படம் "அங்ரேஸி மீடியம்' அண்மையில் தான் வெளியாயிற்று. வெளியான மறுநாளே ஊரடங்கு தடை விதிக்கப்பட்டதால் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. இருப்பினும் ஒ.டி.டி தளங்களில் இப்படம் வெளியான போது இவர் தன் ரசிர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை மீண்டும் வருவேன் காத்திருங்கள்.
இதற்கிடையில் இவரது தாயார் சபீதா பேகம், ஜெய்ப்பூரில் காலமான போது ஊரடங்கு தடை காரணமாக நேரில் செல்ல முடியாததால் காணொலி மூலம் இறுதி அஞ்சலியை செலுத்தினார். இரு தினங்களுக்குள் இவரது உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட இர்பான்அலிகான், சிகிச்சை பலனின்றி 54-ஆவது வயதில் காலமானார்.
அடுத்தடுத்து இரு நடிகர்களை இழந்ததால் பாலிவுட் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...