தெரியுமா?
ஒரு சமயம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.


ஒரு சமயம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.
ஒரு எழுத்தாளன் எப்படிப்பட்ட "மை' பயன்படுத்த வேண்டும் என்பதை மிக தெளிவாக உண்"மை'யை எடுத்துரைத்துள்ளார்.
தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையை தொட்டு எழுது
கிறார்கள் தெரியுமா?
சிலர் தற்பெரு"மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா"மை'யில் தொட்டு எழுதுகிறார்கள்.
வேறு சிலரோ பழ"மை'யில்தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை. இவற்றையெல்லாம் அரு"மை'யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில"மை'கள் உள்ளன. இவை என்ன தெரியுமா? கய"மை', பொய்"மை', மட"மை', வேற்று"மை' ஆகியவைதாம். கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.
எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய "மைகள்'என்னென்ன தெரியுமா?
நன்"மை' தரக்கூடிய நேர் "மை', புது"மை', செம்"மை', உண்"மை'.
இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியது எவைத் தெரியுமா? வறு"மை', ஏழ்"மை', கல்லா"மை', அறியா"மை'ஆகியவையே.
இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள் கட"மை'யாகவும், உரி"மை' யாகவும் கொண்டு சமூகத்திற்குப் பெரு"மை' சேர்க்க வேண்டும் என்று பேசி முடித்தார். கூட்டத்தில் உற்சாக ஒலி விண்ணைப் பிளந்தன.

உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை பிரபல "ஃபோர்ப்ஸ்' இதழ் சமீபத்தில் வெளியிட்டது. அதில் உலகில் மிக இளம் வயதில் பணக்காரராக அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் இடம்பெற்றுள்ளார்.
"ஃபோர்ப்ஸ்' இதழ் தனது 35-வது ஆண்டு கோடீஸ்வரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 2,775 பணக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் இந்தாண்டு மட்டும் 660 பேர் புதியதாக இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா ஊரடங்கு இருந்த போதும் கடந்த 2020-ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயதான கெவின் டேவிட் லெஹ்மன் இடம்பெற்றுள்ளார். இவர்தான் உலகின் மிக இளைய வயதுடைய பணக்காரர் என "ஃபோர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுள்ளது.
கெவின் டேவிட் 330 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரர் ஆவார். கெவினுக்கு இவ்வளவு சொத்து மதிப்பு வர முக்கிய காரணம் அவருடைய தந்தை குந்தர் லெஹ்மன்தான். இவர் ஜெர்மனியின் மிகப்பெரிய மருந்துக்கடையான Dm drogerie market நிறுவனத்தை நிறுவியவர்.
தன்னுடைய சொத்து மதிப்பில் குறிப்பிட்ட பங்கை தன் மகனுக்கு எழுதிவைத்துள்ளார். இதன்காரணமாக கெவின் டேவிட் லெஹ்மன் இளம் வயது பணக்கார பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...