வாழ்நாள் எழுபது ஆண்டுகள்

உயிரினங்களிலேயே மிகப்பெரிய விலங்காக யானை கருதப்படுகிறது. இதன் சராசரியான வாழ்நாள் எழுபது ஆண்டுகள். ஏறக்குறைய மனித வாழ்நாளை ஒத்த உயிரினமாக இது உள்ளது. 
வாழ்நாள் எழுபது ஆண்டுகள்
Updated on
1 min read


உயிரினங்களிலேயே மிகப்பெரிய விலங்காக யானை கருதப்படுகிறது. இதன் சராசரியான வாழ்நாள் எழுபது ஆண்டுகள். ஏறக்குறைய மனித வாழ்நாளை ஒத்த உயிரினமாக இது உள்ளது.

அரிமா, வேங்கை போன்ற வலிமையான விலங்கினங்களுக்கு இணையான வலிமை கொண்ட ஒரு விலங்காக நிலத்தில் யானை திகழ்கிறது. 

பல சிங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு யானையை ஒருவேளை கொல்ல நேரலாம். அவ்வாறு ஏற்படும் சண்டைகள் இளைய யானைக்கும் சிங்கத்திற்குமான சண்டையாகவே இருக்கும். பருமனிலும் ஆகிருதியிலும் பலம் கொண்ட பெரிய யானையை வீழ்த்துவது என்பது மற்ற விலங்கினங்களுக்கு அவ்வளவு எளிதல்ல.

ஒருநாளைக்கு 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதற்கு செலவு செய்கிறது யானை. இவற்றின் செரிமானத்திறன் மிக மந்தமானது. உண்பதில் 40 விழுக்காடே செரிமானமாகிறது. எனவே அளவுக்கு அதிகப்படியான உணவை இவை உட்கொள்ள வேண்டியுள்ளது. வளர்ந்த யானை நாள் ஒன்றிற்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவை உட்கொள்கிறது. 

யானைக் குடும்பத்தில் மொத்தம் மூன்று சிற்றினங்கள் உலகில் இன்றைக்கு உயிரோடு உள்ளன. ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் இவை மூன்றும்தான் அவை. இந்த இனங்களுக்கு இடையே பல வேறுபாடுகள் உண்டு. இனங்களுக்கு தக்க, நிலத்திற்கு ஏற்ப இவைகளின் குணநலன்கள், அங்க மாறுபாடுகள் ஏராளம் உள்ளன. 

ஆப்ரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட அளவில், உருவத்தில் பெரியவை. ஆப்ரிக்க யானைகளுக்கு காதுமடல்கள் பெரியதானவை. ஆண், பெண் இரண்டிற்கும் நிகரானத் தந்தங்கள் உண்டு. ஆசிய பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்காது. சில யானைகளுக்கு மட்டும் அரிதாக இருக்கலாம். 

ஆண் யானை பொதுவாக மூன்று மீட்டர் உயரமும் 6000 கிலோ கிராம் எடையையும் கொண்டிருக்கும். யானையின் தோல் சுமார் 3 செ.மீட்டர் தடிமனாக இருக்கும். யானை பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் மலையின் மீதும் செங்குத்தான இடங்கள் மீது சரளமாக ஏறவும் இறங்கவும் செய்யும். அந்தத் திறன் அவற்றிற்கு அதிகமாகவே உண்டு.

யானையின் துதிக்கை மிக விஷேசமானது. மொத்தம் 40 ஆயிரம் தசைகளால் ஆனது. இந்தத் துதிக்கையினால் பெருமரக் கிளைகளை ஒடிக்கவும், உடைக்கவும் அதனால் முடியும். அதோடு பெரும் சுமைகளையும் துதிக்கையினால் இவை தூக்கிச் சுமக்கின்றன. உணவை எடுக்கவும் நீர் அருந்தவும் யானை தன் துதிக்கையை பயன்படுத்திக் கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com