கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!அமெரிக்க இடைக்கால தேர்தல்! இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி!விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

பேய் கதையாக "டிக் டாக்'

ஃபேன் மேட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "டிக் டாக்'. "மூடர்கூடம்' ராஜாஜி, சுஷ்மா ராஜ்,பிரியங்கா மோகன், சாம்ஸ், முருகானந்தம், வினோதினி, நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Updated On :

ஃபேன் மேட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "டிக் டாக்'. "மூடர்கூடம்' ராஜாஜி, சுஷ்மா ராஜ்,பிரியங்கா மோகன், சாம்ஸ், முருகானந்தம், வினோதினி, நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

"எங்கிட்ட மோதாதே' படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இந்தப் படத்தின் கதையை எழுதுகிறார். மதன் எழுதி, இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... "" மிகப்பெரிய மால் ஒன்றில் பேய் வீடு செட் அமைத்து பார்வையாளர்களுக்கு த்ரில் வழங்கும் வேலையைச் செய்து வருகின்றனர் நாயகனும் நாயகியும். இந்த வீட்டில் நிஜமான பேய் ஒன்று நுழைவதும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளையும் காமெடி, த்ரில் என கலந்து படமாக்கி வருகிறோம்.

பேய் உருவானதற்கான பின்னணி இதுவரை சொல்லப்படாத ஒன்றாக இருக்கும். ராஜாஜி இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் இன்று வில்லன் கதாபாத்திரம். யாருமே நடிக்கத் தயங்கும் அந்த கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் துணிச்சலாக நடிக்கிறார் ராஜாஜி. இதற்காக மொட்டை அடித்துள்ளார். இளைஞர்களிடம் இருந்து பிரிக்கமுடியாமல் இரண்டற கலந்திருந்த, டிக்டாக் செயலி போல, கமர்ஷியலான அம்சங்களுடன் இந்தப்படம் உருவாகி இருப்பதால் "டிக்டாக்' என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.கே.ரிஷால் சாய். "ராட்சசன்' படத்திற்குப் படத்தொகுப்பு செய்த ஷான் லோகேஷ் இந்தப் படத்திலும் தனது கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். படப்பிடிப்பு முழுவதுமாக கோவையில் நடத்தப்பட்டுள்ளது. மார்ச் வெளியீடாகப் படம் திரைக்கு வரவுள்ளது'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.