விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் "மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். வசூலில் சாதனை செய்த இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இந்த நிலையில் "மாஸ்டர்' படக்குழுவினரோடு மீண்டும் இணைவதில் ஆர்வத்துடன் இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் "" விஜய்யுடன் நான் நடித்த முதல் படம் "மாஸ்டர்'. விஜய் போன்ற புகழ்பெற்ற நடிகருடன் நடிக்கும் ஆர்வம் பெரிய அளவில் இருந்தது. விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் போன்ற திறமைசாலிகளுடன் பணியாற்றியது நல்ல அனுபவத்தை தந்தது. நாங்கள் அனைவரும் படப்பிடிப்பில் பல மணிநேரம் ஒன்றாக செலவழித்தோம். எனது சினிமா வாழ்க்கையில் இது ஒரு மைல்கல். மீண்டும் இதே படக்குழுவினரோடு இணையவேண்டும்'' இவ்வாறு தனது விருப்பத்தை மாளவிகா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமணமாகி 8 ஆண்டுகள்... ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக மாறிய ஆல்யா - சஞ்சீவ்!

ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!

விஜய்யைத் தாக்கியிருந்தால்... எச்சரிக்கும் ரசிகர்கள்!

பாஜகவுடன் ஸ்டாலின், காங்கிரஸுக்கு மறைமுக உடன்பாடு: மமதாவின் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


