கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

தாமதமாக சொன்ன நன்றி

காஜல் அகர்வாலும், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவும் காதலித்து வந்தனர். காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

News image
Updated On :5 ஜூன் 2021, 2:24 pm


காஜல் அகர்வாலும், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவும் காதலித்து வந்தனர். காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் மும்பையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

காஜலின் திருமண புகைப்படத்தை சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் அனுஷ்கா. காஜலின் திருமணம் முடிந்த மறுநாள் வாழ்த்தியிருந்தார் அனுஷ்கா. அந்த சுட்டுரைப் பதிவுக்கு காஜல் 7 மாதங்கள் கழித்து இப்போது தான் பதில் அளித்திருக்கிறார். இதை பார்த்த அனுஷ்கா ரசிகர்கள் காஜல் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.