/

படத் தலைப்புக்கு சிக்கல்

"தமிழ் ராக்கர்ஸ்'  என்ற பெயரில் உருவாகி படத்துக்கு தலைப்பு சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சினிமாக்களின் பெயர் பதிவு செய்யும் அமைப்பான கில்டுவில் புகார் தெரிவித்தார்.

News image
Updated On :9 மே 2021, 12:45 pm


"தமிழ் ராக்கர்ஸ்'  என்ற பெயரில் உருவாகி படத்துக்கு தலைப்பு சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சினிமாக்களின் பெயர் பதிவு செய்யும் அமைப்பான கில்டுவில் புகார் தெரிவித்தார்.

இது குறித்து விசாரித்த ஜாக்குவார் தங்கம் இது சம்பந்தமான முறையான விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.  அவர் கூறும் போது... ""தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி என்பவர் கில்டில் " தமிழ் ராக்கர்ஸ்' என்ற தலைப்பை பதிவு செய்தார். நாங்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய வர்த்தக சபை ஆகிய சங்கங்களை முறையாக விசாரித்து, அவர்களின் ஒப்புதலுக்கு பிறகே தலைப்பை கில்டு சார்பாக பதிவு செய்தோம்.

தற்போது முழு படத்தையும் முடுத்து விட்டதோடு "தமிழ் ராக்கர்ஸ்' என்ற தலைப்பில், தயாரிப்பாளர் பிச்சாண்டி தணிக்கை சான்றிதழும் பெற்றுவிட்டார். மத்திய அரசு அங்கீகரித்த தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு படத்தின் தலைப்பை மாற்றும்படி சொல்ல நீங்கள் யார்? அப்படியே அந்த தலைப்பில் ஏதாவது பிரச்னை என்றால், அது குறித்து சங்கத்தில் புகார் அளிக்கலாம். தமிழ் ராக்கர்ஸ் படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு துணையாக நிற்போம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்''  என்றார் ஜாக்குவார் தங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.