ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஜூன் 17-இல் மாயோன்

தமிழ் திரை உலகில் ஒரு படம் உருவான பிறகு, அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என இவைகளில் ஏதேனும் ஒரு வகையில் வெளியாகி ரசிகர்களை கவரும்.

News image
Updated On :24 ஏப்ரல் 2022, 12:02 pm

DIN

தமிழ் திரை உலகில் ஒரு படம் உருவான பிறகு, அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என இவைகளில் ஏதேனும் ஒரு வகையில் வெளியாகி ரசிகர்களை கவரும்.

அந்த வகையில் "மாயோன்' படக் குழுவினர், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வித்தியாசமான முறையில் சிந்தித்து, இந்தியாவில் இதுவரை யாரும் செய்திராத வகையில் முதன் முதலாக பார்வை சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் படைப்பை உணர்ந்து கொள்ளும் வகையில் "மாயோன்' பட டீஸரை பிரத்யேக ஒலிக்குறிப்புடன் வெளியிட்டனர்.

படக் குழுவினரின் இந்த புதிய முயற்சிக்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது.  இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா எழுதி இசையமைத்த "மாயோனே..' எனத்தொடங்கும் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர். இந்தப் பாடலின்  பாடல் வரி விடியோவில்  இடம்பெற்ற "ழ்' என்ற சொல் குறித்து இணையவாசிகளிடம் பெரிய அளவில் விவாதமும் அரங்கேறியது. பாடல் முழுவதும் பரவிய ஆன்மிக உணர்வு, திரையிசை ரசிகர்களை துல்லியமாக சென்றடைந்து, பாடல் வெளியான குறுகிய காலத்தில் மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து தணிக்கைக்காக சென்றது. இப்போது  "யு' சான்றிதழுடன்  வரும் ஜூன் 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார்.  சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  என். கிஷோர் இயக்குகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.