ஒரு வார்த்தைக்கு பின்னால்....
"ஓகே' என்பதன் முழு வடிவம் என்னவென்று பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.


"ஓகே' என்பதன் முழு வடிவம்என்னவென்று பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
"ஓகே' என்பது ஆங்கிலத்தில் மிகவும் பொதுவான வார்த்தைகளில் ஒன்று. ஏற்றுக்கொள்வது, உடன்பாடு, ஒப்புதல் போன்ற பல விஷயங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. ஓகே என்பது ஒரு கிரேக்க வார்த்தை. 182 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது. இது அமெரிக்க பத்திரிகையாளர் சார்லஸ் கார்டன் கிரீனின் அலுவலகத்தில் தொடங்கியது. 1839 ஆம் ஆண்டில், எழுத்தாளர்கள் வேண்டுமென்றே வார்த்தைச் சுருக்கங்களைப் பயன்படுத்தினர். அதில் ஓகே என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
ஓகே முதலில் எல்லாமே சரி என்பதன் சுருக்கமாக பயன்படுத்தப்பட்டது. இது இலக்கணம் பற்றிய ஒரு நையாண்டி கட்டுரை 1839 இல் "பாஸ்டன் மார்னிங்' போஸ்டில் வெளியிடப்பட்டது. இந்தப் போக்கு பின்னாளில் மாறியது. இது ஆல் ரைட் என்றும் பொருள்படும்.
இதன் பிறகு ஓகே என்பது தேர்தல் முழக்கமாக பயன்படுத்தப்பட்டது. 1840-ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதி மார்ட்டின் வான் ப்யூரனின் மறுதேர்தல் பிரசாரத்தில் ஓகே என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு, அது உலகம் முழுவதும் பிரபலமானது.
ஒகே என்பது பூர்வீக அமெரிக்க இந்திய பழங்குடியான சோக்டாவின் என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்று முன்பு கூறப்பட்டது. இது ஆப்ரிக்காவின் வோலோஃப் மொழியிலிருந்து பெறப்பட்டது என்றும் கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...