மொழியால் பெருமை!

லண்டன் கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழகத்தின் வருகை தரு விரிவுரையாளர் சிவா பிள்ளை.
மொழியால் பெருமை!
Updated on
2 min read

லண்டன் கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழகத்தின் வருகை தரு விரிவுரையாளர் சிவா பிள்ளை. இலங்கையில் பிறந்தவர். பேச்சாளர். சர்வதேச தமிழ்த் தேர்வு தலைமை பரிசோதகர் லண்டன் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்மொழி கலைக்கழக இயக்குநர். 30ஆண்டுகளாக கணினித்துறையில் பணியாற்றி கற்பித்தலில் நவீன வசதிகளை உருவாக்கியவர். தமிழ் மொழிக்கான அங்கீகாரம் குறித்து அவரிடம் பேசினோம்.

இங்கிலாந்தில் தமிழ் மொழிக்கான அங்கீகாரம் பற்றி....?

""பல தரப்பட்ட மக்கள் வாழ்கின்ற இங்கிலாந்து போன்ற நாட்டில் கற்பித்தலில் பல மொழிகள் பயன்படுத்துவது என்பது சிரமமான பணி. ஆட்சி மொழி என்பது வேறு கற்றல் மொழி என்பது வேறு. இந்நாட்டில் அதிகமானோர் ஆங்கில மொழி தான் பேசுகின்றனர். ஆனால் கற்றல் செயற்பாட்டில் ஆங்கில மொழி முதன்மையாக இருந்தாலும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய மொழிகளை கற்கலாம். இங்கே பிரெஞ்ச், டச் போன்ற ஐரோப்பிய மொழிகள் நீண்ட காலமாகக் கற்பிக்கப்பட்டு வந்தாலும் தமிழ் போன்ற ஆசிய மொழிகள் கற்கின்ற வாய்ப்பை இங்கிலாந்து அரசு 2000ஆம் ஆண்டு கால கட்டத்தில் தேசிய தமிழ் பாடத்திட்டத்தை கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழகம் தலைமையின் கீழ் வெளியிடப்பட்டது. அதனுடைய ஆக்கத்தில் நானும் ஒருவராக இருந்தேன்.


கேம்பிரிட்ஜ் தேர்வுக்குழுவின் சபையால் மூன்று நிலையில் தேர்வுகள் நடத்தி அச்சபை தமிழ் மொழிக்கு அங்கீகாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் அதற்கு தன்னார்வம் கொண்டு நடத்தி வரும் தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் முழுஆதரவு கொடுக்கவில்லை என்ற காரணத்தினாலும், அரசுக்கு இதனால் வருமானம் பெற முடியாது என்பதாலும் 2010ஆம் ஆண்டில் அது நிறுத்தப்பட்டது. அரசு தமிழ் மொழியை ஒரு பாடமாகக் பாடசாலையில் கற்கலாம் என்று அறிவிக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழுமையாகக் செய்து கொடுக்கவேண்டும். அது இப்போது இங்கே இல்லை இருப்பினும் பயிற்சியாளர்கள் பற்றாக்குறையும் இருக்கிறது. அதனால் இந்த நடைமுறை எல்லா பாட சாலைகளிலும் கிடையாது.

இங்கிலாந்தின் ஆட்சியில் உள்ள இந்த மாகாணங்களில் இரு மொழி கற்கும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன்னுரிமையை வழங்கி ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் 310 மொழிகள் பேசப்படுகின்றன. 26 மொழிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேசுகின்றனர். இம்மொழிகளுள் 12 மொழிகள் தேர்தெடுக்கப் பெற்று, மொழியை அதன் கட்டமைப்பு அடிப்படையில்இவ்வாறு தான் கற்பிக்க வேண்டும் முடிவு செய்து கற்பிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக தமிழ் இருக்கைகள் செயல்பாடுகள் குறித்து?

ஆசிய, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைபற்றிய கல்விக்கு உலகில் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக லண்டன் பல்கலைக்கழகம் விளங்குகிறது. இது 1916ஆம்ஆண்டிலிலேயே தொடங்கப்பட்டது அப்போது இங்கே 20 மொழித்துறைகளில் ஒன்றாக தமிழ்த்துறை இருந்தது. இதில் இளங்கலை, முதுகலை, மற்றும் முனைவர் பட்டங்களுக்கான கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. இப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு இந்தியாவின் அப்போதைய ஆங்கிலேயஅரசால் நிதியுதவியும் அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 78ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த இத்துறை நிதிப்பற்றாக்குறையாலும், மாணவர் சேர்க்கை குறைவு காரணமாகவும் 1995ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் சுமார் 3லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

இரண்டாவது தலைமுறையாக வாழும் இவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறியவர்கள். இந்த தலைமுறையை சேர்ந்தவர்களிடையே எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தமிழ் கற்பித்தலில் அடைந்த மகிழ்ச்சி?

மாணவர்கள் நமது மனிதாபிமானம், வேறுபாடு, ஒற்றுமைகளையும் கற்றுணர்ந்து மதித்துக் கொள்ளத் தெரிந்து கொள்வதால் தங்களது சொந்த பந்தங்களுக்கு இடையே நிறைவான, சிறப்பான புரிதலோடு இயங்க முடிகிறது. இங்கிலாந்தில் தமிழ் மொழிக்கென ஒரு பாடத்திட்டம் ஏனைய ஐரோப்பிய மொழிகளுக்கு இருப்பது போல உருவாக்கப்பட்டு 2006லிருந்துஇங்கிலாந்து அரசாங்க பள்ளிகளிலும். வார முடிவில் பள்ளி முடிந்த பின் மாலை நேரத்தில் நடக்கும் தமிழ் பள்ளிகளிலும்கற்பிக்கப்படுகிறது. இதில் கற்பிக்கும் ஆசிரியர் பலர் தாய்நாட்டில் பயிற்சி பெற்ற ஆசிரியர், சிலர் தமிழ் கற்பிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்ட சமூகத் தொண்டர்கள். ஆனாலும்இந்நாட்டிற்கு ஏற்றவாறு தமிழ் ஆசிரியர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. இதனால் இந்நாட்டு மாணவர்களிடம் அணுகு முறைகள் ஆசிரியர்களிடம் காணப்படுவது குறைவு.

இதற்கென பல பயிற்சிப் பட்டறைகள் இந்நாட்டு பல்கலைக்கழக ஆர்வலர்கள் மூலமாக நடத்தப்பட்டாலும் அதில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை குறைவு தான்.

நான் கணினித்துறையில் தொடக்க காலம் முதல் கவனம் செலுத்தியதால் நம் மொழிக்கும், இனத்திற்கும் இத்துறையை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் 30ஆண்டுகளுக்கு முன்பே இத்துறையை முழுமையாக கற்றுக்கொண்டு அதன் வழியாகத் தமிழ் மொழியை கணினி மூலமாக புகுத்தி தமிழ்க்கல்வியை எளிமைப்படுத்தினேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com