குறள் வழி கதை

திருக்குறள் கருத்தில் உருவாகி வரும் படம் "அடங்காமை'. கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருப்பவர் ஆர். கோபால். இலங்கையைச் சேர்ந்த சரோன், ஆந்திராவில் பிரபல விளம்பர மாடலான பிரியா ஆகியோர் நடிக்கின்றனர்.
குறள் வழி கதை
Published on
Updated on
1 min read

திருக்குறள் கருத்தில் உருவாகி வரும் படம் "அடங்காமை'. கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருப்பவர் ஆர். கோபால். இலங்கையைச் சேர்ந்த சரோன், ஆந்திராவில் பிரபல விளம்பர மாடலான பிரியா ஆகியோர் நடிக்கின்றனர்.  யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா, முகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் பேசும்போது.... ""சிறுவயதிலிருந்து ஒன்றாகப் பழகிய மூன்று நண்பர்கள் ஆளுக்கொரு ஒரு லட்சியத் தோடு வளர்கிறார்கள். இவர்களுக்கு பழி வளர்கிறது. ஒருவருக்கொருவர் எப்படிப் பழிவாங்குவது என்று துடிக்கின்றனர். பழகிய நட்பில் பழிவாங்குதல் அறமல்ல என்று  அஞ்சித் தவிக்கின்றனர். ஆனால் இயற்கையோ மாறுபட்ட தீர்ப்பை வழங்குகிறது.

திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக "அடக்கமுடைமை' அதிகாரத்தில் முதலில் வரும் "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்  ‘ என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் .ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது. விரைவில் படம் திரைக்கு வருகிறது'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com