இரு கதாபாத்திரங்களின் சம்பவங்கள்
"பொது நலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன், அடுத்து எழுதி இயக்கவுள்ள படம் தொடங்கியுள்ளது.


"பொது நலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன், அடுத்து எழுதி இயக்கவுள்ள படம் தொடங்கியுள்ளது. பெயரிடப்படாத இப்படத்தின் துவக்க விழா கடந்த வாரம் நடந்தது. இந்த படத்தில் ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா, சிவான்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவு இயக்குநராக ஜிஜுவும், கலை இயக்குநராக முஜிபுரும் பணியாற்றுகிறார்கள். இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருக்கும் ஒருவனுக்கும் எப்படியும் வாழலாம் என்று இருக்கும் இன்னொருவனுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதைக் கரு. அந்த இரு துருவ குணச்சத்திரங்களுக்கும் இடையில் சுழலும் சம்பவங்கள்தான் கதை. ""இப் படம் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாட்டு நடப்பு அரசியலைத் தோலுரித்துக் காட்டும் காட்சிகள் பரபரப்பாக இருக்கும்'' என்றார் இயக்குநர் சீயோன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...