சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தமிழுக்கு திரும்பும் சுசி கணேசன்

பாலிவுட் சினிமாக்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த இயக்குநர் சுசி கணேசன், ஹிந்தியில் "தில் ஹே கிரே' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

News image
Updated On :8 ஜனவரி 2022, 10:43 am

தினமணி

பாலிவுட் சினிமாக்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த இயக்குநர் சுசி கணேசன், ஹிந்தியில் "தில் ஹே கிரே' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார் சுசி கணேசன். இந்தப் படத்துக்கு "வஞ்சம் தீர்த்தாயடா' என பெயரிடப்பட்டுள்ளது. 

1980- காலக் கட்டங்களில் மதுரையில் நடந்த நிஜ சம்பவங்களின் பின்னணியை கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் சினிமாவாக இது உருவாகவுள்ளது.  இந்தப் படத்தை சுசிகணேசனின் 4 வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஹிந்தியில்  இரண்டு படங்கள் தயாரித்துள்ள சுசிகணேசன் ஹிந்தி தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். அத்துடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் உறுப்பினராக அங்கம் வகிக்கிறார்.  "" மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்புவதில் பெருமை கொள்கிறேன். இது ஒரு வித்தியாசமான படைப்பாக தமிழ் ரசிகர்களை சென்று சேரும்'' என்று தெரிவித்துள்ளார் சுசி கணேசன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.