

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் "பாரன்ஸிக்'. தற்போது இந்தப் படம் "கடைசி நொடிகள்' என்ற பெயரில் தமிழில் டப்பிங் படமாக உருவாகி வருகிறது. மலையாள ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் பார்வைக்காக உருவாகி வருகிறது. டொவீனா தாமஸ் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.
மம்தா மோகன்தாஸ், ரெபா மோனிகா, மோகன் ஷர்மா, பிரதாப்போத்தன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படையை அமைக்கிறது. அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். கொலைகளும் கொலை நடத்திய விதமும் ஒரே மாதிரி இருப்பதால் கொலைகாரன் ஒருவரே தான் செய்திருக்க வேண்டும் என்று விசாரணையில் தெரிய வருகிறது.
கண்டுபிடித்தை போலீஸிடம் சொன்னால் அவர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த கொலைகாரனை எப்படி பிடிக்கிறான் என்பது கதை. இப்படத்திற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு செல்கிறது. த்ரில்லர் என்றால் இதுதான் என்று ஒவ்வொரு காட்சிகளும் நெஞ்சை அள்ளிக் கொள்ளும் விதமாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், படம் விரைவில் திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.