புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆதரவுக்கு நன்றி 

உலகின் முதல் "நான் -  லீனியர் சிங்கிள் ஷாட்' படமாக உருவாகி வெளியாகியுள்ளது பார்த்திபனின் "இரவின் நிழல்'. படத்துக்கு ரசிகர்களிடம் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2022, 11:02 am

DIN


உலகின் முதல் "நான் - லீனியர் சிங்கிள் ஷாட்' படமாக உருவாகி வெளியாகியுள்ளது பார்த்திபனின் "இரவின் நிழல்'. படத்துக்கு ரசிகர்களிடம் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு, ஏ.ஆர். ரஹ்மானின் இசை என ஒரு பக்கம் பேசப்பட்டாலும், கலை இயக்குநராக பளீச்சென தெரிகிறார் விஜய் முருகன். ""சார்லி சாப்ளின்', "அரவான்', "குடைக்குள் மழை', "சுறா', "பரமசிவம்', "ஜனா', "திரைக்கதை வசனம் இயக்கம்', "இறைவி', "விஐபி', "மாரி', "கோலிசோடா', "சத்ரியன்' என பல படங்களுக்கு கலை இயக்கம் செய்திருந்தாலும், "இரவின் நிழல்' என் பயணத்தின் பெருமைக்குரியதாக இருக்கிறது.

இது எனக்கு 50-ஆவது படம் என்பது இன்னும் கூடுதல் பெருமை. "இரவின் நிழல்' தானாகவே தனக்கான ஆட்களைத் தானே தேடிக் கொண்டது. தானாக அதைத் தேடி வந்த ஆட்களைப் புறந்தள்ளியது என்றுதான் சொல்ல வேண்டும். 2 ஆண்டு காலம் பார்த்திபனுடன் பயணம் செய்து அவர் மனதில் தோன்றிய எண்ணங்களைப் புரிந்து கொண்டு ஏராளமான மாற்றங்களையும் திருத்தங்களையும் மேம்பாடுகளையும் கண்ணெதிரே பார்த்துக் கொண்டு மனதில் ஊறி ஊறி அந்தப் படத்தோடு ஒன்றி பணியாற்றினேன். வழக்கம்போல சுதந்திரமாக அரங்கமைப்புகள் என்றால் புகுந்து விளையாடி விடுவோம். ஆனால் இது ஒரே ஷாட் மூலம் சுமார் ஒன்றரை மணி நேர படமாக எடுக்கக் கூடிய திட்டம் என்கிற போது அனைவரையும் நிர்பந்தம் தொற்றிக்கொண்டு விட்டது. ஒளிப்பதிவு ஆளுமை ரவிவர்மன் உள்ளிட்டவர்களின் பாராட்டுகள் இன்னும் என்னை வேகம் எடுக்க வைக்கின்றன. ஆதரித்த எல்லோருக்கும் நன்றி'' என்றார் விஜய் முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.