"தி லெஜண்ட்' உருவானது எப்படி?

சரவணா ஸ்டோர்ஸின் "தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்'  முதலாளியாக அறியப்பட்டவர் சரவணன் அருள்.  அந்தக் கடையைவிடவும், அதற்காக எடுக்கப்பட்ட விளம்பரம் அதிக அளவில் பேசப்பட்டது.
"தி லெஜண்ட்' உருவானது எப்படி?
Updated on
1 min read

சரவணா ஸ்டோர்ஸின் "தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்'  முதலாளியாக அறியப்பட்டவர் சரவணன் அருள்.  அந்தக் கடையைவிடவும், அதற்காக எடுக்கப்பட்ட விளம்பரம் அதிக அளவில் பேசப்பட்டது.  காரணம், அந்த விளம்பரத்தில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா,  தமன்னாவுடன் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்திருந்தார். அந்த விளம்பரத்துக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த விளம்பரங்களில் புதுப்புது தோற்றங்களில் வந்து அசத்தினார். கொஞ்சம் நடனமும் ஆடினார்.

தீபாவளிக்கும், பொங்கலுக்கும் விதவிதமான ஆடைகளில் வேறு வேறு கெட்டப்புகளில் தோன்றி மக்களுக்கு ஆச்சரியம் கொடுத்தவாறே இருந்தார். அவரின் விளம்பரங்கள் ரீச் ஆன போதே சரவணன் அருள் திரைப்படங்களில் நடிக்கப் போகிறார் என்ற பேச்சும் எழாமல் இல்லை. இப்போது படத்தின் வெளியீட்டுக்கே தயாராகி விட்டார்.  படத்துக்கும் தி லெஜண்ட் என்பதே பெயர். ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி "ஒரு லெஜண்டாக' எப்படி உருவாகிறான் என்பது திரைக்கதை. உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி - ஜெரி எழுதி இயக்குகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை,  கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன.   மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்த படம் என்று சொல்லப்படுகிறது. ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  ரூபன் எடிட் செய்கிறார்.   பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார்.

வைரமுத்து, கபிலன், பா. விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com