அருள்நிதியின் டி பிளாக்

ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான கதை தேர்வினால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் அருள்நிதி.
அருள்நிதியின் டி பிளாக்
Published on
Updated on
1 min read


ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான கதை தேர்வினால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் அருள்நிதி. அந்த வகையில் அவர் அடுத்து நடித்து வரும் படம் "டி பிளாக்.' பிரபல யூடியூப் சேனலான "எரும சாணி' புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் எழுதி இயக்குகிறார். ரத்தன் யோகான் இசையமைக்க, தயாரிப்பையும் ஒளிப்பதிவையும் அரவிந்த் சிங் செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஒரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

அவந்திகா மிஸ்ரா கதாநாயகியாக நடிக்கிறார். கரு. பழனியப்பன், விஜயகுமார், உமா ரியாஸ், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். 

படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""கல்லூரியை பின்னணியாக கொண்ட களம். கல்லூரி என்பது, ஒரு சமூகம். ஒரு தேசம். அங்கிருக்கும் சூழலையும் சக மாணவர்களையும் அனுசரிக்க முடியாமல் போனதுதான் இங்கே பல பேருக்கான பிரச்னை. அது வெறும் வாடகை சத்திரம் அல்ல. அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். 

ரசவாதக் கூடம். மாறுபவனும் இருக்கிறான். மாற்றப்படுகிறவனும் இருக்கிறான். எல்லா கல்லூரிகளிலும் யாரோ ஒருவன் வீட்டுக்கு அடங்காமல் வந்து சேருகிறான். யாரோ ஒரு மாணவனுக்கு காதல் பூக்கிறது. ஒருவனுக்கு மரணம் நிகழ்கிறது. யாரோ ஒருவன் கலைஞனாகிறான். கவிதை எழுது

கிறான். அரசியல் கற்று உணர்கிறான். ஒருவன் குற்றவாளியாகிறான். நிறைய பேர் திருந்துகிறார்கள். யாரோ ஒருவன் தன்னைத்தானே கண்டுபிடித்துக் கொள்கிறான். இதன் பின்னணியில் ஒரு த்ரில்லர் முயற்சி'' என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com