

"அவள் பெயர் தமிழரசி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பிரதீப். அதன்பிறகு சைவம், தவம், அதிபர், பசங்க 2, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, பொன்மகள் வந்தாள், தலைவி படங்களில் நடித்தார். தற்போது வார்டு 126 உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.வித்யா ஸ்டெம் செல் உயிரியல் படித்து வந்தார். இந்த படிப்பில் ஆய்வு செய்து தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது...
சங்கர நேத்ராலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இதற்காக நான் பெருமை படுகிறேன். தற்போது முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். சென்னைக்கு நான் வந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறது. அடுத்து முதுகலை படிப்புக்காக அமெரிக்காவுக்கு செல்கிறேன்.
அறிவியலுக்கும் சமூகத்திற்கும் மிகுந்த நேர்மையுடன் எனது சிறந்த பங்களிப்பைத் தொடருவேன். எனது முனைவர் வழிகாட்டி மற்றும் வழிகாட்டியான டாக்டர் எஸ் கிருஷ்ணகுமார், இணை வழிகாட்டி பேராசிரியை உமா மகேஸ்வரி, முதன்மை விஞ்ஞானிகள் டாக்டர் செளமியா மற்றும் டாக்டர் நிவேதிதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.