
"சைக்கிள் விடத் தெரியாது என்று சொன்னால் வேலை கிடைக்காது என்பதால் தெரியும் என்று பொய் சொல்லி ஒரு டாக்டரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். அவரிடம் சிகிச்சை பெறுபவர்கள் சிலருக்கு அக்கவுண்ட் உண்டு. மாதம் முடிந்தவுடன் பில்லை எடுத்துகொண்டு போய் பணத்தை வசூலித்து கொண்டு வர வேண்டும்.
கையாலேயே சைக்கிளை தள்ளிக் கொண்டு போய் குறிப்பிட்ட வீடுகளில் பணத்தை வசூலித்து கொண்டு வருவேன். சைக்கிள் விடுவதைவிட அதைத் தள்ளிக் கொண்டு போவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தான் தெரியும்.
ஜெயகாந்தன் ஒரு கட்டுரையில் எழுதியது.
----------------------------------------------------------------
சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பதவி விலகியதும் நேராகத் தன் ஊருக்குச் சென்று, தனது வயலில் விவசாயம் சார்ந்த வேலை செய்ய ஆரம்பித்தார்.
----------------------------------------------------------------
ஒருமுறை தஞ்சையில் அவர் தங்கியிருந்த அறையில் கூடவே பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் தங்கியிருந்தார். சுப்பிரமணியன் வயிற்றுக் கோளாறால் துடித்தார். உடனே கி.ஆ.பெ. தனது பையில் இருந்த ஒரு மாவைத் தந்து, அதை சாதத்தில் பிசைந்து சாப்பிட கொடுத்தார். இரண்டு வேளையில் சுப்பிரமணியன் முழுமையாகக் குணம் அடைந்தார். அப்போது, கி.ஆ.பெ. சொன்னார்:
"கருவேப்பிலையை நிழலில் நன்கு காய வைத்து உலர்த்தி பொடியாக்கி, பொரி கடலையையும் நன்கு பொடித்து இரண்டு கலந்து உருவான மாவு இது'' என்றார்.
----------------------------------------------------------------
கி.ஆ.பெ. விசுவநாதம் அருகில் சந்திப்பவர்கள் அவரது பற்களின் பளிச் பார்த்து, செயற்கைப் பல்லோ என்றே திகைப்பர். இதை கி.ஆ.பெ.விடமே கேட்டபோது அவர் கூறியது:
""எனக்கும், மனைவிக்கும் இருப்பது உண்மையான பற்களே! காப்பிப் பொடியும் உப்பும் கலந்த கலவைதான் நான் பயன்படுத்துவது'' என்றார்.
தொகுப்பு: ராஜி ராதா.
----------------------------------------------------------------
போக்குவரத்து வசதிகள் ஏற்படாத அந்தக் காலத்தில் கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்ட உடைகளை சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி செய்ய மாட்டு வண்டியில்தான் கொண்டு வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.