நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலிவுட்டில் ராதிகா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 1980 காலக் கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் ராதிகா.

News image
Updated On :8 மே 2022, 11:53 am

DIN


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 1980 காலக் கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் ராதிகா.

இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகங்களில் ஒருவராக தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ராதிகா. ரஜினி, கமல், விஜயகாந்த்,  சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.   தற்போது 300 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட ராதிகா சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு "மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற பாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

இதில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப் நடிக்கிறார்கள். ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். இந்தப் படத்தில் ராதிகா டெரர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் அம்மாவாகவும், போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார் ராதிகா.  அதேபோன்றே இந்தப் படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.