சம்ஸ்கிருதம்  படிக்கும்  இஸ்லாமிய  மாணவர்கள்!

சம்ஸ்கிருத மொழியை இஸ்லாமிய மாணவர்களும் படித்துவருகின்றனர்.
சம்ஸ்கிருதம்  படிக்கும்  இஸ்லாமிய  மாணவர்கள்!
Updated on
1 min read


சம்ஸ்கிருத மொழியை இஸ்லாமிய மாணவர்களும் படித்துவருகின்றனர்.

வகுப்பறையில்உள்ளவர்களைப் பார்த்தாலே அவர்கள் இஸ்லாமிய பாடப் போதனைகளை படிக்கும் மாணவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அவர்கள் வரிசையாக வகுப்பு அறைக்குள் நுழைந்து பெஞ்சுகளில் அமர்ந்ததும், பேண்ட் சட்டை அணிந்த ஆசிரியர் வகுப்புக்குள் நுழைகிறார்.

பின்னர் ஆசிரியர் "ம்ம்' என்கிறார்.

"குரு பிரம்மா... குரு விஷ்ணு... குரு தேவோ மஹேஸ்வரா ... குரு சாக்ஷாத் பரம் பிரம்மா .. தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா..' என்று சம்ஸ்கிருத சுலோகங்களை மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஸ்லோகங்களை உச்சரித்ததை பாராட்டி ஆசிரியர் "உத்தமம்' (அருமை) என்கிறார்.

அந்த வகுப்பில் ஆசிரியர், இஸ்லாமிய மாணவர்களிடையே உரையாடல் சமஸ்கிருதத்திலே நடக்கிறது. இஸ்லாமிய மத போதனைகள் படிக்கும் மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்கிறார்கள் என்பது உண்மைதான்.

கேரளம், திருச்சூரில் இயங்கும் ஷரியா அகாதெமியில் படிக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கு சம்ஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படுகிறது. அத்துடன் உபநிஷத்துக்கள், புராணங்களும் சம்ஸ்கிருதத்தில் படிக்கின்றனர். ஆசிரியர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.

இதுகுறித்து ஷரியா அகாதெமியின் முதல்வர் முகம்மது ஃபைஸி கூறியது:

""நான் ஆதிசங்கரர் குறித்து படித்துள்ளேன். அவர் சொன்ன போதனைகளையும் சம்ஸ்கிருதத்தில் படித்திருக்கிறேன். அதனால் எனது மாணவர்கள் இதர மதங்களைப் பற்றியும், அவர்களது மத, பழக்க வழக்கங்கள், பூஜை முறைகள், ஸ்லோகங்கள் குறித்து இஸ்லாமிய மதம் குறித்து படிக்கும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் எனது கல்வி நிறுவனத்தில் சம்ஸ்கிருதம் , ஸ்லோகங்கள், உபநிஷத்துக்கள், கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களை படிக்ககச் சொல்லி நான்கு உதவிப் பேராசிரியர்களை நியமித்துள்ளேன் '' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com