கைப்பேசியைத் தொலைத்தால்....!

திருடு போன கைப்பேசியை மீட்கலாம். இதற்கு பொறுமையான நடைமுறைகளைக் கையாள வேண்டியதே அவசியம்.
கைப்பேசியைத் தொலைத்தால்....!
Updated on
1 min read

திருடு போன கைப்பேசியை மீட்கலாம். இதற்கு பொறுமையான நடைமுறைகளைக் கையாள வேண்டியதே அவசியம். இப்படி கைப்பேசி திருடு போனால் என்ன செய்ய வேண்டும் என்பதை பலரும் தெளிவாக அறிவதில்லை. கீழ்காணும் நடைமுறைகளைப் பின்பற்றினாலே போதும்.

முதல் வேலையாக, தொலைந்து போன கைப்பேசியில் உள்ள சிம் கார்டை முடக்க வேண்டும்.

அடுத்ததாக தரவுகளை ரிமோட் முறையில் நீக்குவதுடன், மோசடி நபர்களிடம் சிக்காமல் இருக்க, தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், பைல்களை முடக்க வேண்டும்.

மொபைல் போனை முடக்குதல் : மத்திய அரசின் தொலைதொடர்பு அமைச்சக இணையதளமான சி.இ.ஐ.ஆர் (CEIR) , மொபைல் திருட்டை குறைக்கும் நடவடிக்கையாக, மொபைல் போன் உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் போன்களை முடக்கும் அல்லது முடக்கிய போனை செயல்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

www.ceir.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று, உரிய தகவல்களை அளித்து கைப்பேசியை முடக்கலாம். ஆனால் அதற்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதுடன், கைப்பேசி வாங்கியதற்கான ரசீது, தொலைந்த அல்லது திருட்டு போன இடம் போன்ற கூடுதல் விவரங்களை அளிக்க வேண்டும். உரிய விவரங்களை அளித்து விண்ணப்பதை சமர்பித்தவுடன், போனை முடக்கியதற்கான ஒப்புகைச் சீட்டு கிடைக்கும்.

-ரிமோட் முறையில் தரவுகளை அழித்தல்: 

நீங்கள் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவோராக இருந்தால், ஜ்ஜ்ஜ்.ஞ்ர்ர்ஞ்ப்ங்.ஸ்ரீர்ம்/ஹய்க்ழ்ர்ண்க்/ச்ண்ய்க் என்ற முகவரிக்கு சென்று, கூகுள் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதில் உங்கள் மொபைல் போன் விவரங்கள் மற்றும் இடம் இடம்பெறும். தற்போது, பாதுகாப்பு மற்றும் அழிக்கும் வசதியை தேர்வு செய்து, தொலைந்த போனில் உள்ள தரவுகளை அழிக்கலாம்.

ஐபோன் பயன்படுத்துவோராக இருப்பின். www.icloud.com/find என்ற இணைய முகவரிக்கு சென்று ஆப்பிள் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதில் பல்வேறு ஆப்பிள் சாதனங்கள் குறித்த தகவல்கள் காண்பிக்கப்படும்.அதில் உங்களது மொபைல் போனை தேர்வு செய்து, தனிப்பட்ட தகவல்களை அழிக்கலாம். ஒருவேளை போன் எண் அல்லது குறுஞ்செய்தியை உள்ளிடுமாறு கேட்டால், மொபைல் தொலைந்துவிட்டது என்பதை பதிவு செய்ய வேண்டும். அல்லது எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதை தெரிவிக்க வேண்டும். லாக் செய்த மொபைல் போனில் திரையில் எண், குறுஞ்செய்தி தோன்றும். ஆப்லைனில் இருக்கும்போது போன் தொலைந்து போனால், அடுத்த முறை ஆன்லைன் வரும்போது மட்டுமே ரிமோட் முறையில் தரவுகளை அழிப்பது நடக்கும். ஒருவேளை, தரவுகளை அழிக்கும் முன் கைப்பேசி கிடைத்துவிட்டால், கோரிக்கையை ரத்து செய்து கொள்ளலாம்.

சிம் கார்டை முடக்குவது :

சிம் கார்டை முடக்கினால்தான் நம் எண்ணை மற்றவர்கள் தவறான பயன்படுத்துவது தடுக்கப்படும். கைப்பேசி தொலைந்து போனதற்கான காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கையுடன், உங்கள் டெலிகிராம் ஆபரேட்டரிடம் சென்றோ, வாடிக்கையாளர் குறைதீர்ப்பு எண்ணில் அழைத்தோ, சிம் கார்டை முடக்கி விடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com