டீஸருக்கு வரவேற்பு 

மீண்டும் ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது "மைக்கேல்'.  சந்தீப் கிஷன்,  விஜய் சேதுபதி இருவரும் முதன் முறையாக இதில் இணைந்து நடிக்கின்றனர்.  
டீஸருக்கு வரவேற்பு 
Updated on
1 min read


மீண்டும் ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது "மைக்கேல்'. சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இருவரும் முதன் முறையாக இதில் இணைந்து நடிக்கின்றனர். கெளதம் வாசுதேவ்மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ், வருண் சந்தேஷ் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், "மைக்கேல்' படத்தின் தமிழ் பதிப்பின் டீஸரை நடிகர் தனுசும், தெலுங்கு பதிப்பின் டீஸரை நடிகர் நானியும், மலையாள பதிப்பின் டீஸரை நடிகர் துல்கர் சல்மானும், கன்னட பதிப்பின் டீஸரை நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டுள்ளனர். ஹிந்தி பதிப்பின் டீஸரை நடிகர் ராஜ்குமார் ராவ், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜான்வி கபூர், இயக்குநர்கள் ராஜ், டிகே ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

டீஸரில் படத்தின் முக்கியமான காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும், கெளதம் வாசுதேவ் மேனனின் வில்லத்தனம் கலந்த காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதன் கதை எண்பதுகளில் தொடங்குவது போன்று அமைக்கப்பட்டிருப்பதால், நடிகர்களின் கெட்டப்புகள் மற்றும் அரங்கங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.

"மைக்கேல்' படத்தின் டீஸரில், ""மைக்கேல்! வேட்டையாட தெரியாத மிருகத்த மத்த மிருகங்கள் வேட்டையாடிடும் மைக்கேல்'' என்ற வசனத்திற்கு, ""துரத்துற பசியிலிருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியனும்னு அவசியமில்ல மாஸ்டர்'' என நாயகன் பதிலளிக்கும் வசனங்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. ரஞ்சித் ஜெயக்கொடி எழுதி இயக்குகிறார்.

கிரண் கெளஷிக்கின் ஒளிப்பதிவும், சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும் டீசரை மீண்டும் மீண்டும் காணத் தூண்டுகிறது. இந்தப் படத்திற்கான வசனங்களை திரிபுராநேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதாமணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் எழுதியுள்ளனர். விரைவில் படம் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com