வ. கௌதமனின் மாவீரா
மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் வ. கௌதமன்... சினிமா தவிர்த்து அரசியல் களத்தில் இயங்கி வந்தவர், தற்போது "மாவீர' என்ற படத்தை இயக்கவுள்ளார்.


மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் வ. கௌதமன்... சினிமா தவிர்த்து அரசியல் களத்தில் இயங்கி வந்தவர், தற்போது "மாவீர' என்ற படத்தை இயக்கவுள்ளார். "கனவே கலையாதே", "மகிழ்ச்சி' உள்ளிட்ட படங்களுக்குப் பின்னர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். வி.கே புரொடக்ஷன் குழுமம் இப்படத்தை தயாரிக்கிறது. தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை கதை களத்தோடு தொடர்புபடுத்தி கொள்ள செய்யும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பபதாக வ. கௌதமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது....
""சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடு பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை இவ்வுலகிற்கு ஒரு தரிசனமாக, சமரசமில்லா படைப்பாக்கி தருவது மட்டும் தான். சந்தனக்காட்டு வீரப்பனை படைத்து விட்டேன். முந்திரிக்காடு, வன்னிக்காடு மட்டுமே மீதமுள்ளது. "அத்துமீறினால் யுத்தம்' என்கிற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வீரவரலாறே "மாவீரா'. கதை கேட்ட கணத்திலேயே இசைப் பொறுப்பேற்ற ஜி. வி. பிரகாஷ், "உனக்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே இப்படைப்பு ஒரு தலைநிமிர்வு' என்று வாழ்த்தியதோடு "புலிக்கொடி எங்கக் கொடி - நாங்க... பூமிப்பந்தின் ஆதிக்குடி' எனத் தொடங்கும் பாடலை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அடித்து ஆடிப்பாடும் பாடலாக எழுதித்தந்து எனது அனைத்துப் படைப்புகளுக்கும் தோளோடு தோள் நிற்கும் "கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கும் என் நன்றிகள்'' என்றார்.
ஒளிப்பதிவை வெற்றிவேல் மகேந்திரன் கையாள்கிறார். வசனங்களை பாலமுரளி வர்மன். கலை இயக்கத்தை மாயப்பாண்டியும், சண்டைப் பயிற்சியை "ஸ்டண்ட்' சில்வாவும், படத்தொகுப்பை ராஜாமுகமதுவும் கவனிக்கிறார்கள். நடிகர்கள் விவரம் விரைவில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...