சண்டை காட்சிகளில் தனித்துவம்
திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இயக்கும் ஸ்டண்ட் இயக்குநராக குறுகிய காலத்தில் அறிமுகம் ஆகி பல்வேறு வகையான கதாநாயகர்களின், பல மாறுபட்ட படங்களின் மூலம் தனக்கான ஓர் இருக்கை


திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இயக்கும் ஸ்டண்ட் இயக்குநராக குறுகிய காலத்தில் அறிமுகம் ஆகி பல்வேறு வகையான கதாநாயகர்களின், பல மாறுபட்ட படங்களின் மூலம் தனக்கான ஓர் இருக்கை தயாரித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார் சண்டை இயக்குநர் விக்கி. சமீப காலத்தில் வெளிவந்த "உறியடி' படம் தான் அவருக்கு முதல் படம். ஆனால் அதற்குப் பிறகு அசுர வேகத்தில் வளர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி வரை கால் பதித்துக் களமாடி வருகிறார். ""நான் நான்கு ஆண்டுகள் ஜிம்னாஸ்டிக் கற்றுக் கொண்டேன்.
2004-ஆம் ஆண்டு தான் நான் முதலில் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அங்கே பத்து ஆண்டுகள் ஸ்டண்ட் நடிகராகவும் சில படங்களில் மாஸ்டரின் உதவியாளராகவும் என்று பல படங்களில் பணியாற்றினேன். ஒருவருக்கு முதல் வாய்ப்பு கிடைப்பதும் அது சரியாக அமைவதும் திரைப்பட வாழ்க்கையில் முக்கியமானது. அப்படி எனக்கு முதல் வாய்ப்பு "உறியடி' படத்தின் மூலம் தான் கிடைத்தது.அந்த நல்ல வாய்ப்பை வழங்கிய இயக்குநர் விஜயகுமாரை என்றும் என்னால் மறக்க முடியாது. "உறியடி' படத்தின் மூலம் நல்லதொரு அடையாளமும் எனக்கு நல்ல அங்கீகாரமும் கிடைத்தன.
இந்தப் படத்திற்காக எனக்கு சிறந்த ஸ்டண்ட் கோரியோகிராபருக்கான பிஹைன் வுட்ஸ் விருது கிடைத்தது .அப்படி எனது முதல் படமே முத்திரைப் படமாக அமைந்தது. அதற்கு பிறகு ஏராளமான படங்கள் பணியாற்றினேன். அதிதி, அப்புச்சி கிராமம், அண்ணனுக்கு ஜே, அருவி, ஜோக்கர், மாயவன், சிலுக்குவார்பட்டி சிங்கம், விழித்திரு, கா, டான், வால்டர், ருத்ரதாண்டவம், உத்ரா, குருதி ஆட்டம் ஆகிய படங்களும் கவனிக்க வைத்தன. ஆதரவளித்து வரும் அனைத்து இயக்குநர்களுக்கும் எனது நன்றிகள் என்றார் விக்கி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...