லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "தமிழ்க்குடிமகன்'. சேரன் கதாநாயகனாக நடிக்கிறார். எஸ். ஏ. சந்திரசேகர், துருவா, ஸ்ரீ பிரியங்கா, தீப்ஷிகா, வேல ராமமூர்த்தி, ரவி மரியா, மு. ராமசாமி, அருள் தாஸ், மதுரையை சேர்ந்த பிரபல நாடக நடிகர் எம். கே. ஆர். உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். இசக்கி கார்வண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது...
""படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல, இது ஒரு மனிதனின் குடியுரிமையை பற்றிய படம். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்தும் சமுதாய சமநிலை குறித்தும் இப்படம் பேசுவதோடு மட்டுமில்லாமல் ஆக்கப்பூர்வமான விவாதங்களையும் உருவாக்கும். மனித மனம் காட்டை மறந்து, வீட்டின் சூழலுக்குப் பழக்கப்பட்ட மிருகம் போல எப்போதும் ஒரு நிர்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது. மிருகம் மிருகமாக இருக்க இயலாமல் தடுப்பது மிருகத்தின் கோணத்தில் பெருந்துக்கம். எங்கேயாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து , உள் இழுத்து முழுவதுமாக புதைந்து போயிருந்த நினைவுகளை எல்லாம் தூர்வாரி வெளியே இழுத்துப்போட்டால் எப்படி இருக்கும். அப்படி ஒரு தாக்கத்தில் எழுந்த உணர்வுதான் படம். பரவசம் கொடுக்கும் பயணம், எளியவர்களின் எதிர்பார்ப்பு இல்லாத பிரியம்... இப்படித்தான் இருக்கும் இது'' என்றார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 4-ல் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை! எப்போது தொடங்கும்? - தேர்தல் ஆணையம்

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று ஹைதராபாத் விமான நிலையத்துக்கு!
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!
கொளுத்தும் வெய்யில்.. நல்ல விஷயம் சொன்ன சென்னை வானிலை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


