புலிட்சர் விருது..!

இலக்கியம்,  பத்திரிகை, தொழில்நுட்பம், நாடகம், சினிமா உள்ளிட்ட துறைகளில் சிறப்பும் தகுதியும் வாய்ந்தவர்களுக்கு "புலிட்சர் விருது' வழங்கப்படுகிறது.
புலிட்சர் விருது..!
Updated on
1 min read


இலக்கியம்,  பத்திரிகை, தொழில்நுட்பம், நாடகம், சினிமா உள்ளிட்ட துறைகளில் சிறப்பும் தகுதியும் வாய்ந்தவர்களுக்கு "புலிட்சர் விருது' வழங்கப்படுகிறது.  உலகப் புகழ் பெற்ற இந்த விருதைத் தோற்றுவித்தவர் ஜோசப் புலிட்சர். அவரது வாழ்க்கை சுருக்கம்:

அங்கேரிய நாட்டில் 1847-ஆம் ஆண்டு  ஏப். 10-இல் பிறந்தார்.  1864-இல் லண்டனுக்கு வந்த அவருக்கு வயது பதினேழு.  இவர் ஆங்கிலேயே ராணுவத்தில் சேர முயன்றார்.  அதற்கேற்ற உடல்கட்டும், கண்பார்வையும் இல்லாததால் முதலில் அவர் நிராகரிக்கப்பட்டார்.  

பின்னர், அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த யூனியன் படைகளுக்கு ஆள் திரட்டிய ஏஜென்ட்டின் பரிந்துரையில், ராணுவத்தில் சேர்ந்தார்.

அமெரிக்காவில் சிறிதுகாலம் ராணுவச் சேவையில் ஈடுபட்டவுடன், ஜெர்மானிய பத்திரிகை ஒன்றில் நிருபராகச் சேர்ந்தார்.  தனது 24-ஆவது வயதில் அந்தப் பத்திரிகையின் உரிமையாளர்களில் ஒருவராகிவிட்டார் புலிட்சர்.

நாற்பது வயது நிரம்புவதற்குள் அமெரிக்க நாட்டின் மிகப் பெரிய கோட்டீஸ்வரராக விளங்கினார். ஆனால், துரதிஷ்டவசதமாக அவர் கண் பார்வையை இழந்தார்.  பார்வையை இழந்தாலும், சிறந்த அறிவாளிகளுடன் துணையோடு, மேலும் சிறப்புற்றார்.  அவர் 1911-ஆம் ஆண்டு அக். 29-ஆம் தேதி தனது 64-ஆம் வயதில் மறைவுற்றார். அவர் தனது மறைவுக்கு முன்னதாக, அறக்கட்டளை ஒன்றை உருவாக்கினார். அந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்த விளங்குவோருக்கு விருதுகளை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் வைத்திருந்த நிதியில் இருந்து ஆண்டுதோறும் கிடைக்கும் நிதியில் இருந்தே விருது வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com