பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிரபுதேவாவின் 60-ஆவது படம் 

ரபுதேவாவின் 60-ஆவது படமாக உருவாகி வருகிறது "வுல்ப்'.  அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, அஞ்சு குரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2023, 6:30 pm

DIN

பிரபுதேவாவின் 60-ஆவது படமாக உருவாகி வருகிறது "வுல்ப்'.  அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, அஞ்சு குரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  கன்னட சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. எஸ். ஜே. சூர்யாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றி "சிண்ட்ரெல்லா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வினு வெங்கடேஷ் இந்தப் படத்தை கதை எழுதி இயக்குகிறார்.  

படம் குறித்து இயக்குநர் பேசும் போது..."" தனிமைக்கும், கூட்டத்துக்குமான மோதல் எப்போதும் நிகழ்ந்து வருவதுதான். இங்கேயும் அப்படித்தான் தனித்த ஓநாய் ஒன்றுக்கும், கூட்டமாகச் செயல்படும் ஓநாய் ஒன்றுக்குமான மோதலாக கதை சித்தரித்திருக்கிறேன். வசியம் செய்பவர்கள் பற்றி செய்தித்தாள்களில் அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. அதை பின் தொடர்ந்து சில கற்பனைகளை கலந்து சினிமாவுக்கான கதை பிடித்திருக்கிறேன்.  

வரலாற்று காலத்திலிருந்து இன்றுவரை பயணிக்கும். அறிவியல் புனைவுக்கதையான இதில், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும். புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்தமானில் கதை நிகழ்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.  படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.