சுதந்திர இசையில் முத்திரை 

மேலை நாடுகளைப் போல இங்கேயும் சுதந்திரப் பாடல்கள், ஆல்பங்கள் அதிகமாக வெளிவருகின்றன.  
சுதந்திர இசையில் முத்திரை 
Updated on
1 min read

மேலை நாடுகளைப் போல இங்கேயும் சுதந்திரப் பாடல்கள், ஆல்பங்கள் அதிகமாக வெளிவருகின்றன.  ஹாலிவுட் திரையுலகில் திரை நுழைவிற்கான ஒரு முன்னோட்டமாக குறும்படங்களும் ஆல்பங்களும் இருப்பது போல் இங்கேயும் அந்தப் போக்கு தொடங்கியுள்ளது. அந்த வகையில் தனது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக ஸ்ரீகாந்த் கேவிபியின் 4}ஆவது பாடல் வெளியாகி, ரசிகர்களிடம் உற்சாகமான வரவேற்பை குவித்து வருகிறது.  இது குறித்து அவர் பேசும் போது.... 

""இது என்னுடைய நான்காவது சிங்கிள். இளைஞன் ஒருவனின் கடந்த கால காதல் நினைவுகளை அசை போடுவது போல் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறோம்.  பாடலின் இசை மனதை வருடும் விதத்திலும், பாடலின் காட்சிகள் ஒருவித கனவுலகுக்குள் இழுத்துச் செல்வது போன்ற உணர்வைத் தரும்படியும் உருவாக்கியுள்ளோம். பாடலுக்கான விஷுவல்ஸ் வித்தியாசமாக இருக்க வேண்டும் என யோசித்து உருவாக்கியிருக்கிறோம். அதற்கான படப்பிடிப்பு தளங்கள், காட்சி அமைப்புகளில் வித்தியாசம் காட்டியுள்ளோம்.

இந்தப் பாடல் ஒவ்வொருவரையும் அவர்களின் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க வைக்கும். பள்ளி, கல்லூரி கால காதல்களை அசைப் போட வைக்கும். காரணம், எல்லோருமே அப்படியான ஓர் அனுபவத்தை கடந்துதான் வந்திருப்பார்கள். அதனால், எல்லோரையும் ஏதோவொரு விதத்தில் இந்த பாடல் இணைக்கும்.   வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது மாதிரி,  முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். 

சினிமாவுக்கு இசையமைக்க வேண்டும் என்பது எனது கனவு. அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அந்த இலக்கை அடைவேன்.'' என்றார்  ஸ்ரீகாந்த் கேவிபி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com