பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

டிமான்ட்டி காலனி 2 

ஹாரர் பாணி சினிமாக்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்தது "டிமான்ட்டி காலனி'.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2023, 4:51 pm


ஹாரர் பாணி சினிமாக்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்தது "டிமான்ட்டி காலனி'.  2015-ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. டிமான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அப்படத்தின் முடிவுக்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் சேர்த்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

 அருள்நிதி,  பிரியா பவானி சங்கர்,  அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார். கதை எழுதி இயக்குகிறார் அஜய் ஞானமுத்து. படத்தின் உருவாக்கம் குறித்து அவர் பேசும் போது... ""தற்போது நாங்கள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், ஓரிரு மாதங்களில் பல்வேறு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தின் மிகப்பெரிய வெளியீட்டிற்கான தேதியை பார்த்து வருகிறோம். வர்த்தக வட்டாரத்தில் இந்தத் திரைப்படத்திற்கான வரவேற்பு சிறப்பாக உள்ளது.  

இப்படத்தின் படப்பிடிப்பு ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. "டிமான்ட்டி காலனி 2' படத்தின் டீசர், இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியாகும்'' என்றார். 

தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மிக வித்தியாசமான வகையில் மிரள வைக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.