மாணவர்களுக்கு உதவிய தமிழறிஞர்
பெரியசாமி தூரன் தமிழுக்குச் செய்த தொண்டுகள் ஏராளம். அவற்றில் முக்கியமானது கலைக் களஞ்சியம் பத்து தொகுதிகள்.


பெரியசாமி தூரன் தமிழுக்குச் செய்த தொண்டுகள் ஏராளம். அவற்றில் முக்கியமானது கலைக் களஞ்சியம் பத்து தொகுதிகள். அவரின் திறமையையும், தமிழ்ப் பணியையும் போற்றும் விதமாக, அவினாசிலிங்கம் தான் நடத்திவந்த ராமகிருஷ்ண வித்யாலயாவில் தலைமை ஆசிரியர் பதவியை அளித்து கௌரவித்தார். இதற்காக, அவருக்கு முப்பது ரூபாய் ஊதியம்.
இவர் தனி வீடு எடுத்துத் தங்காமல் மாணவர் விடுதிகளில் தங்கிப் பணிபுரிந்தார். தனக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தில் பத்து ரூபாயை விடுதிக்கும், பத்து ரூபாயை ஏழை மாணவர்களின் கல்விக்கும் கொடுத்துவிடுவார். மீதமுள்ள பத்து ரூபாயை மட்டும் தனக்கு வைத்து கொள்வார். இப்படியும் ஒரு தமிழறிஞர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...