தி ரூட் மற்றும் தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ரிவால்வர் ரீட்டா'. கீர்த்தி சுரேஷ் கதையின் முதன்மை பாத்திரம் ஏற்று நடிக்கிறார். "சென்னை 28', "மாநாடு' உள்பட பல வெற்றிப் படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய சந்துரு இப்படத்தை எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே சரஸ்வதி சபதம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான கமர்ஷியல் படமாக ரிவால்வர் ரீட்டா படத்தை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகை சமந்தா இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் துப்பாக்கியுடன் அசத்தலாக இந்தப் போஸ்டரில் காட்சியளிக்கிறார். பழைய கால போஸ்டர் பாணியில் இருக்கும் இதில் பெயிண்டிங் போல வித்தியாசமான முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து இணையத்தில் வைரலாகி வருகிறது. மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் தொழில்நுட்பக் குழு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படத்தின் ஒளிப்பதிவு இயக்குநராக தினேஷ் கிருஷ்ணன் பணியாற்றவுள்ளார். படத்தொகுப்பாளராக பிரவீன் ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். சண்டை பயிற்சி இயக்குநராக திலீப் சுப்பராயன் பணியாற்றவுள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


