ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மன உளைச்சலில் கேட்ட கதை

வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் "வாத்தி'. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

News image
Updated On :12 பிப்ரவரி 2023, 12:30 am

வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் "வாத்தி'. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதன் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது.  விழாவில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் பேசிய நடிகர் தனுஷ் ""எதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் பெற்றோர்களின் வேண்டுதல்கள் உங்களுடைய கைத்தட்டலாக என்னை வந்து சேர்கிறது. இது 90- களில் நடக்கக் கூடிய ஒரு கதை.

இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் ஆசிரியர்களின் வேலை எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்தது. ஆசிரியர்கள் தான் நம் தலையெழுத்தை மாற்றக் கூடியவர்கள். கரோனா பொது முடக்க காலத்தில்தான் இயக்குநர் வெங்கி இந்த கதையைச் சொன்னார். நானே அப்போது வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்தேன். வருகிற கதையை எப்படியாவது மறுத்து விடலாம் என்று இருந்தேன். கதையைக் கேட்டதும் எனக்கு பிடித்துப் போய் விட்டது.

அதனால் தவிர்க்க முடியாமல் அவரிடம் எப்போது தேதி வேண்டும் என்று தான் கேட்டேன். இந்தப் படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஜி.வி. பிரகாஷ் இப்போது செம ஃபார்ம்மில் இருக்கிறார். "படிப்பு பிரசாதம் மாதிரி. அதை பைவ் ஸ்டார் ஹோட்டலில் விற்காதீர்கள்' - இதுதான் "வாத்தி' படத்தின் கதை. பள்ளியில் பெற்றோர்கள் பீஸ் கட்டி விடுவார்கள் என்று கவனமின்றி சுற்றியிருக்கிறேன். என் பிள்ளைகளை படிக்க வைக்கும் போதுதான் அது தெரிகிறது. எந்த சூழ்நிலை வந்தாலும் படிப்பு மிகவும் அவசியம். எண்ணம் போல் வாழ்க்கை, உங்களுடைய எண்ணத்தை படிப்பில் வையுங்கள். அது தான் உங்களைக் காப்பாற்றும்'' என்று பேசினார் தனுஷ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.